Header Ads



முஸ்லிம் தரப்பினரை இன்று, சந்திக்கிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

இனங்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் முறுகல் நிலையை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். இதன்படி நேற்று (22) பொதுபல சேனா, ராவண பலய, சிங்ஹல ராவய அடங்கலான பௌத்த அமைப்புகளை சந்தித்து பேச்சு நடத்திய அமைச்சர் இன்று முஸ்லிம் அமைப்புகளை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.

இனவாதம் தூண்டப்படுவதை தடுத்தல் பௌத்த விவகாரங்கள், முஸ்லிம்கள் தொடர்பான விடயங்கள், பிக்குமார் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தற்போதைய முறுகல் நிலை, அவற்றுக்கான தீர்வு என்பன குறித்து இங்கு ஆராயப்பட்டதாக அறிய வருகிறது.

முஸ்லிம் தரப்பினர் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் இனவாதத்தை தடுப்பதற்கான விடயங்கள் என்பன பற்றி இன்று (23) முஸ்லிம் தரப்புடன் பேசப்பட இருப்பதாக அறிய வருகிறது.

பொதுபல சேனா அடங்கலான பௌத்த அமைப்புகளுடனான சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பொதுபல சேனா தலைவர் கலபொட அத்தே ஞானசார தேரர்,

இனங்களுக்கிடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு தரப்பும் மாறி மாறி மற்றைய தரப்பு மீது குற்றஞ் சுமத்தி வருகிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது. மற்றைய தரப்பை சந்தேக கண்கொண்டே பார்க்கின்றனர்.

பிக்குமார் குறித்து அமைச்சர் தெரிவித்த கருத்தை ஏற்க முடியாது. எந்தத் தரப்பில் இருந்து இனவாதம் வந்தாலும் அதனை ஒடுக்குவதாக அமைச்சர் கூறியிருந்தார்.

எம்மை மற்றைய தரப்பு இனவாத குழு என குற்றஞ்சாட்டுகிறது. நாம் மற்றைய தரப்பை இனவாத குழு என தெரிவிக்கிறோம். இந்த நிலையில் நாட்டில் தற்பொழுதுள்ள நிலைமைகள் குறித்தும் முக்கியமான விடயங்கள் கொள்கை ரீதியான விடயங்கள் பற்றியும் பேச்சு நடத்தப்பட்டது. அமைச்சருடனான பேச்சில் பல விடயங்கள் தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டது. அமைச்சர் குறித்து நம்பிக்கை வைத்துள்ளோம். கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து மீண்டும் பேச இணக்கம் காணப்பட்டுள்ளது என்றார்.

6 comments:

  1. It seems the new arrival of HUDAIBIYA AGREEMENT.....it seem to me ???

    ReplyDelete
  2. இதன் முடிவு கோட்டுகள் மாற்றப்படுவது மட்டும்தான்.இதை இலங்கையின் முஸ்லிம் தரப்பு விளங்கிக் கொண்டால் போதும். முடியுமானால் இவரைப்பதவியில் இருந்து மரியாதையாக விலகிக் கொள்ளுமாறு வலியுறுத்துங்கள். சட்டமும் நீதியும் தெரிந்த நீதியைச்சரியாக நிலைநாட்டக்கூடிய ஒருவரை அந்த பொறுப்புக்கு நியமனம் செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துங்கள்.

    ReplyDelete
  3. ** மாபெரும் காமெடி என்றே நாங்கள் சொல்வோம்.பேசுவதட்கு என்ன இருக்கிறது.
    ** முஸ்லிம்களின் மத சம்பந்தமான உள்விவகாரங்களில் தலையிட எவருக்கும் உரிமையில்லை.
    ** முஸ்லிம்களால் இந்த நாட்டில் ஒரு சிறு சம்பவமும் சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது பெளத்த மதத்துக்கு எதிராகவோ இடம் பெறாத நிலையில் எதை பற்றி பேச போகின்றார்கள் என்பது புரியவில்லை.
    ** பக்க சார்பற்ற போலீசும், பக்கச்சார்பற்ற நீதியும் நிலை நாட்டப்பட்டாலே போதும்.
    ** முஸ்லிம்களை அச்சுறுத்தி சட்டத்தை கையில் எடுக்கும் தேரர்களையும், சிங்கள குண்டர்களையும் உடனடியாக சட்டத்தின் நிறுத்த வேண்டும், அவர்களுக்கான தணடனைகளும் கொடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. எங்கட காக்கமார்கள் இப்ப அவன்தார படீஸ் , பாலுதா குடிச்சிட்டு அங்க போய் பள்ளிலிச்சிட்டு வருவாங்க. மானங்கெட்ட பிழைப்பு.

      Delete
  4. இவனோடு பேச யாரும் போகக் கூடாது வெறுப்பை காட்ட வேண்டும் ,

    ReplyDelete
  5. நல்ல முன்னெடுப்பு தான். ஆனால் பொதுபலயினரை திருப்திப்படுத்த என்ன செய்யப்போகிராரோ.

    ReplyDelete

Powered by Blogger.