Header Ads



ஆதம் மலையில் ஹோட்டல் நிர்மாணிக்கும், முஸ்லிம் நாட்டின் திட்டத்திற்கு தடை

ஸ்ரீபாத மலைக்கு (ஆதம் மலை) அருகில் அமைந்துள்ள நல்லதண்ணி பகுதியிலுள்ள தோட்டத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த ஹோட்டல் திட்டம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அந்த பகுதிக்கு ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகளினால், இது தொடர்பில் தோட்ட கண்காணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டதாக சுற்றாடல் அதிகாரசபையின் மத்திய மாகாண பணிப்பாளர் சுஸந்த வெதகே தெரிவித்துள்ளார்.
மவுஸாகலை நீர்த்தேக்கத்திற்கு மேல் அமைந்துள்ள மரே நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள பழைய கட்டிடம் ஒன்றை உடைத்து புதிய ஹோட்டல் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எப்படியிருப்பினும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியின்றி குறித்த பகுதியில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள நிலைமை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு இன்றைய தினத்திற்குள் எழுத்து மூலம் தடை உத்தரவு வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஹோட்டல் திட்டம் காரணமாக ஸ்ரீபாதைக்கு அருகில் உள்ள சுற்றாடல் பாதிக்கப்படவுள்ளதோடு, உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தப் பகுதியில் முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்று ஹோட்டல் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுள்ளது.
இது தொடர்பான கள ஆய்வினை குறித்த வர்த்தக நிறுவனத்தினர், ஹெலிகொப்டர் மூலம் அந்தப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. அரசாங்கம் இப்படியே முட்டாள்களின் பேச்சை கேட்டு பொருளாதார கஷ்ட சுமையை சுமக்க வேண்டியது தான் இதன் சுமை நாட்டு மக்கள் தான் அனுபவிக்க வேண்டும் வேலைவாய்ப்பு ,சந்தை வரி வருமானம் இதையெல்லாம் அரசாங்கம் இழக்க வேண்டும்.

    ReplyDelete
  2. சைனா நிறுவனங்களுக்கு விற்றால் சும்மா இருப்பாங்க ...

    ReplyDelete
  3. தான் செய்றதும் இல்ல செய்கின்றவர்களை விடுவதும் இல்லை!! வேலை தேடி நாட்டை விட்டு போகணும் என்றது தலை விதி!!!!!!!!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.