Header Ads



செல்லுபடியற்ற இந்திய, நாணயத்தாள்கள் விற்பனையில் பகல்கொள்ளை

இந்தியாவில் 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, சிறிலங்காவில் உள்ள சில நாணயமாற்று முகவர்கள், பகல்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் இருந்து இந்தியாவுக்கு பெருமளவானோர் அடிக்கடி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதால், இந்திய  நாணயத் தாள்கள் அவர்களிடம் இருப்பது வழமை.

அடுத்த பயணத்தின் போது பயணத்துக்காக பயன்படுத்தலாம் என்பதால், 500 ரூபா, 1000 ரூபா இந்திய நாணயத்தாளை சேமித்து வைத்திருந்தவர்கள், இந்த தாள்கள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நாணயத்தாள்களை இந்தியாவில் மாற்றுவதற்கு டிசெம்பர் 30ஆம் நாள் வரையே காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறிலங்காவில் இந்திய நாணயத்தாள்களை மாற்றிக் கொடுப்பதை, பெரும்பாலான நாணயமாற்று முகவர்கள் நிறுத்தியுள்ளனர்.

எனினும், ஒருசில முகவர்கள், மிகக் குறைந்த விலைக்கு இந்திய நாணயத்தாள்களை வாங்கி, கொள்ளை இலாபம் ஈட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இந்திய ருபா ஒன்றின் சிறிலங்காவில் விற்கும் விலை 2.10 ரூபாவாக இருந்தது. சில நாணயமாற்று முகவர்களும், தரகர்களும், 500 மற்றும் 1000 ரூபா இந்திய நாணயத்தாள்களை, 1 மற்றும் 1.20  சிறிலங்கா ரூபா படி கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், 100, 50, 20 ரூபா நாணயத்தாள்கள், வழக்கமான நாணயமாற்றுப் பெறுமதியின் அடிப்படையிலேயே விற்கப்பட்டன.

No comments

Powered by Blogger.