ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய, பிடல் கஸ்ட்ரோ மரணம்
கியூபாவின் முன்னாள் அதிபரும், இடதுசாரிப் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் மரணமானதாக அந்த நாட்டின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
கியூபாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சிக்குப் பின்னர், கிட்டத்தட்ட அரைப்பத்தாண்டு காலமாக, அந்த நாட்டின் தலைவராக பிடல் காஸ்ட்ரோ ஆட்சி நடத்தினார்.
1956ஆம் ஆண்டு கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ, 1976ஆம் ஆண்டு வரை அந்த நாட்டின் பிரதமராகவும், அதற்குப் பின்னர், 1976ஆம் ஆண்டு தொடக்கம், 2008ஆம் ஆண்டு வரை அதிபராகவும் பதவியில் இருந்தார்.
தீவிர அமெரிக்க எதிர்ப்பாளரான, பிடல் காஸ்ட்ரோ, மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்கள், மக்கள் மத்தியில் மதிப்புமிக்க ஒருவராகவும் விளங்கினார்.
2008ஆம் ஆண்டு, கியூப அதிபர் பதவியில் இருந்து விலகிய காஸ்ட்ரோ, தனது சகோதரரான ராவுல் காஸ்ட்ரோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.
அதற்குப் பின்னர், வெளியுலகில் அதிகம் தென்படாதவராக இருந்த காஸ்ட்ரோ, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏகாபதியத்திற்கு அடிபணியாத மாவீரன். ஆனால் இவரோடு இலங்கையில் தீவிரவாதம் செய்த புலி தீவிரவாதி பிரபாகரனை சில முட்டாள்கள் ஒப்பிடுவது நகைச்சுவை. இவர் கால் தூசிக்கு ஈடாவானா பிரபாகரன் ?
ReplyDelete