ஈராக்கில் பயங்கர அவலம் - நெஞ்சை உருக்கும் புகைப்படம்
ஈராக்கில் குடிக்க தண்ணீரின்றி பசியால் வாடி எலும்புக்கூடான குழந்தைகளின் நெஞ்சை உருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத குழு கட்டுபாட்டிலிருக்கும் மோசூல் நகர மக்களே இவ்வாறு அவதிப்பட்டு வருகின்றனர்.
Hasansham அகதி முகாமிலே குறித்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், இருக்கும் மெலிந்த குழந்தைகளில் ஒருவருக்கு 2 வயதும் மற்றொருவருக்கு 9 வயதும் ஆகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய் கூறியதாவது, இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இராணுவ படைக்கும், ஐ.எஸ் குழுவிக்கும் இடையில் நடந்த சண்டையின் போது மோசூல் நகரில் உள்ள 650,000 குடியிருப்பாளர்கள் நீர் வழங்கும் குழாய் துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது, குறித்த இடத்தில் போர் சூழல் நிலவுவதால் குறித்த குழாயை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மோசூல் நகரில் இருக்கும் மக்கள் குடிக்க தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
Post a Comment