Header Ads



தொலைப்பேசி அழைப்புக்களை, ஒட்டுக்கேட்ட கோத்தபாய

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் தொலைப்பேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்டுக்குமாறு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களுக்கமைய லசந்த விக்ரமதுங்க உட்பட பல இலக்கங்களை ஒட்டுக் கேட்டுக்குமாறு கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த உத்தரவில் குறித்த எண்கள் 'தேசிய பாதுகாப்பு' தொடர்பாக புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

லசந்த, கண்காணிப்பு உட்படுத்தப்பட்டுள்ளார், இந்த இலக்கம் ஒட்டு கேட்கப்பட்டதற்கு மத்தியில் பலரது தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது.

லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்னர் (2008 செம்டெம்பர் மாதம் 10ஆம் திகதி இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.) பிரதிப் பொலிஸ் மா அதிபர் கீர்த்தி கஜநாயக்கவுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

2009 ஜனவரி மாதம் அத்திடியவில் உள்ள அவரது அலுவலகத்தில் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார்.

கண்காணிப்பு பட்டியலிடப்பட்ட கை தொலைபேசி பயனாளர்கள் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள் என்று அடிப்படையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பட்டியலிடப்பட்டவர்களில் பலர் ஜனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு, ஜனநாயக ரீதியில் செயற்படுகின்ற முக்கிய அரசியல்வாதிகளாகும். அவர்களுக்குள் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல்வாதிகள் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள் என கூறப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் இலாபங்களுக்காக இவர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அதுவும் அவருடைய உத்தியோகபூர்வ பதவி நிலைப்பாட்டை பயன்படுத்தி அவரது சகோதரர் இந்த உத்தரவை பிறப்பத்துள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.