தம்புள்ளயில் பள்ளிவாசலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு - தடுத்து நிறுத்துமாறு முஸ்லிம்கள் முறைப்பாடு
தம்புள்ளை புனிதபூமியில் முஸ்லிம்கள் புதிதாக பள்ளிவாசலொன்றை நிர்மாணிப்பதற்கு எதிராக தம்புள்ளையில் எதிர்வரும் 19ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கும் முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு ஒன்றினைச் செய்துள்ளது.
தம்புள்ளையில் அரசாங்கம் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு காணி ஒதுக்கியுள்ள நிலையில் மேற்கொள்ளப்படவுள்ள இவ்ஆர்ப்பாட்டம் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் எனவும் சகவாழ்வினைப் பாதிக்கும் என்பதால் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்யுமாறும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான அழைப்புகள் சமூக வலைத்தளங்களிலும் முகநூலிலும் வெளியிடப்பட்டுள்ளன.
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் இம் முறைப்பாட்டைச் செய்துள்ளார். முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தம்புள்ளை பள்ளிவாசல் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி பேரினவாதிகளால் தாக்கப்பட்டது.
பள்ளிவாசல் தாக்கப்படுவதற்கு ஒரு தினத்துக்கு முன்பு அதாவது 19ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது என்றாலும் பொலிஸார் எதுவித தடைகளையும் ஏற்படுத்தாததால் 20ஆம் திகதி பள்ளிவாசல் தாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாம் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் 48 முறைப்பாடுகளைச் செயதுள்ளோம். ஆனால் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
பள்ளிவாசல் தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து அகற்றப்பட்டு புதியதோர் இடத்தில் அதனை நிறுவுவதற்காக 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் அரசாங்கம் காணி ஒன்றினை இனங்கண்டு காணியை எமக்கு காட்டியுள்ளது. இனம் காணப்பட்ட காணி மதுபானசாலையொன்றுக்கு அருகிலிருப்பதால் அதிலிருந்தும் 30 மீற்றர் தூரத்துக்கப்பால் காணியொன்றினை அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.
இந்நிலையிலே தம்புள்ளையிலுள்ள பேரினவாத அமைப்புகள் எதிர்வரும் 19ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை ஏற்பாடுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துபேசி தம்புள்ளை பள்ளிவாசல் விவகார தீர்வுக்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைவெட்டியற்று இருப்பதால் இவ்வாறெல்லாம் மூளை வேலைசெய்கிறது. சும்மா இருக்கமுடியாவிட்டால் நாட்டை குளப்பாமல் விவசாயம், பசுவளர்ப்பில்
ReplyDeleteஈடுபடலாம் ...
Masha allah.good sign
ReplyDelete