மைத்திரிபாலவை படுகொலைசெய்ய கொண்டுவரப்பட்ட குண்டு - பொலிஸார் சந்தேகம்
பொலன்னறுவை மன்னம்பிட்டிய கேகலு கொலனி புராதன வாவிக்கு அருகிலுள்ள வயல் ஒன்றில் காணப்படும் புதரிலிருந்து நேற்று முன்தினம் 5 கிலோகிராம் நிறையுடைய குண்டு ஒன்றை பொலன்னறுவை பொலிஸ் நிலைய விசேட பணியகத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த குண்டு கடந்த யுத்த காலப் பகுதிகளில் விடுதலைப் புலி களினால் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யுத்தம் நிலவிய காலப்பகுதியில் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது அவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த தற்கொலை குண்டுதாரியொருவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்திருந்த நிலையில் அவர் தாக்குதல் நடத்துவதற்காக அதிசக்தி வாய்ந்த குண்டு கள் இரண்டினையும் கொண்டு வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் ஒரு குண்டுஇ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் மற்றைய குண்டு உயிரிழந்த தற்கொலை குண்டுதாரியினால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அந்தக் குண்டே இதுவாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப் பட்டுள்ளது.
(ரெ.கிறிஷ்ணகாந்)
Post a Comment