பயங்கரவாதி பக்தாத்தி சுற்றிவளைப்பு - பிரிட்டன் நாளிதழில் தகவல்
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதியை, இராக்கின் மொசூல் நகரில் அந்த நாட்டுப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் "இண்டிபெண்டன்ட்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழில் வெளியான தகவல்: கடந்த 2014-ஆம் ஆண்டு இராக்கிலும், சிரியாவிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி, அங்கு "இஸ்லாமியப் பேரரசை' நிறுவியதாக அறிவித்து உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி.
அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்ததும், தன்னை "இஸ்லாமியப் பேரரசராக' அறிவித்துக் கொண்டதும் அல்-பாக்தாதியை சக்தி வாய்ந்த தலைவராக்கியது.
இந்தச் சூழலில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்களிடமுள்ள நிலப்பரப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் நிலையில், அல்-பாக்தாதி மொசூல் நகரில் பதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து குர்துப் படையினரின் தலைமைத் தளபதி ஃபாத் ஹுசைன் கூறியதாவது:
கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களாக ஐ.எஸ். தலைவர் அல்-பாக்தாதி மொசூல் நகரில் பதுங்கியுள்ளார்.
இந்தச் சூழலில், மொசூலை மீட்பதற்காக இராக் படைகள் அந்த நகரை சுற்றி வளைத்து முன்னேறி வருகின்றனர். இதன்மூலம், அல்-பாக்தாதி இராக் ராணுவத்தினரிடம் பிடிபடுவதோ, அல்லது கொல்லப்படுவதோ உறுதியாகிவிட்டது.
எனினும், அல்-பாக்தாதி மொசூல் நகரில் இருப்பதால் அந்த நகரை மீட்பதற்கான சண்டை மிகுந்த தீவிரமானதாக இருக்கும். அல்-பாக்தாதியைப் பாதுகாப்பதற்காக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் இறுதி மூச்சுவரை உக்கிரமாகப் போரிடுவார்கள் என்பதால், நகருக்குள் இராக் படையினரின் முன்னேற்றம் மிகக் கடுமையானதாக இருக்கும்.
எனினும், அந்த நகரம் மீட்கப்படுவதோடு அல்-பாக்தாதிக்கு முடிவு கட்டப்படும் என்பதால், அது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு மரண அடியாக இருக்கும்.
ஏற்கெனவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அல்-பாக்தாதிக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அந்த அமைப்புக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்.
வேறு யார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவருக்கு அல்-பாக்தாதியைப் போன்ற வசீகரம் இருக்காது என்று ஃபாத் ஹுசேன் கூறினார்.
இவ்வாறு "இண்டிபெண்டன்ட்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
முன்னேற்றம் நிறுத்தம்: இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக மொசூல் நகருக்குள் முன்னேறும் நடவடிக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அடிவருடிகளாக இயங்கும் ஈராக் அரசு அமெரிக்காவின் வேண்டுகோலுக்கீணங்க யுத்தத்தை சுற்றி வாழைப்பை கைவிட வாய்ப்புகள் வாராதா?ஏனென்றால் அவர்களால் வழர்த்த வழர்ப்பு மிருகங்கள் ஆயிற்றே.
ReplyDeleteIslam enum porvaiyil uduruvum yahoodhihal thaan ivarhal kulu.
ReplyDeleteIslaththin maanaththai Keeri kilikkinraarhal..
விரைவில் இவனது கொலைவெறி ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது.
ReplyDeleteThe same paper was post few month ago bagthathi was dead.😬😬😬
ReplyDelete