''இலங்கை முஸ்லிம்களின், பல்லின மக்களுடனான உறவு''
-பிந்த் ஜஹ்பர் ஹுதாஇய்யா
தென்கிழக்கு வளாகம்-
அன்று என்பது ஜாஹிலிய்யாக்கால மக்கா வாழ்க்கைக்கு எம்மை கொண்டு செல்கின்றது. அறியாமைக்காலம் என வரலாற்றிசிரியர்களால் முத்திரையிடப்பட்ட அன்றைய காலத்திலேயே நபியவர்களும் முஸ்லிம்களும் அறிவுபூர்வமாக நடந்துகொண்டார்கள். இதன் விளைவே இன்றைய உலகில் கிட்டத்தட்ட இரண்டாம்தர இடத்தை முஸ்லிம்களின் சனத்தொகை எட்டியிருப்பது.
அறியாமைக்காலத்தில் இஸ்லாமிய தூது நபியவர்களுக்கு வந்தவேளை தனி நபராக இருந்த அவர்கள் பின்பு மனைவி கதீஜா, தோழர் அபூபக்ர், சிறுவர் அலி, அடிமை ஹாரிதா என இஸ்லாத்தில் முதல் மக்கள் நுழைவு ஆரம்பமானது. பின்பு மக்காவில் 3 வருட இரகசியப்பிரச்சாரம் பின் பகிரங்க இஸ்லாமிய அழைப்பு அந்நிய மத மக்களிடம் முன்வைக்கப்பட்டது.
சொந்த குடும்பத்தவர்களே தூற்றினார்கள் ஏசினார்கள் சூனியக்காரர் பைத்தியக்காரர் என பட்டம் பழி சுமத்தினர். நபியவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையாக இருந்தது வெறும் மௌனமும் இறைத்தூதும் மாத்திரமே. தாயிப் நகர மக்கள் கல்லால் எறிந்து துன்புறுத்தினார்கள். நுபியவர்கள் என்ன செய்தார்கள். ஆவர்களுக்கு நேர்வழியைக் காட்டுமாறே இறைவனைப் பிரார்த்தித்தார்கள்.
3 வருடகாலம் பள்ளத்தாக்கில் நபியவர்களும் ஸஹாபாக்களும் உணவு உறையுள் இன்றி பகிச்கரிப்பு செய்யப்பட்டார்கள். அனைவரும் அவ்வேளை பொறுமையையே கைக்கொண்டார்கள். முஸ்லிம்களின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பண்பாடுகள் அவை. இன்று முஸ்லிம்களாலும் அந்நிய மதத்தவர்களாலும் புரியப்படாத பக்கங்கள்தான் அவை.
நபியவர்கள் அந்நிய மதத்தவர்களுடன் பல யுத்தங்களை மேற்கொண்டார்களே என குற்றம் சுமத்தும் பலர் இவ்யுத்தங்களுக்கான அடித்தளத்தை இட்டவர்கள் யார்? முதலில் போராட்டங்களை ஆரம்பித்தவர்கள் யாவர்? என்பதனை பரியத்தவறிவிடுகின்றனர். வுரலாற்றுச் சுவடுகள் யுத்தத்திற்கான ஆணிவேராய் இருந்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல. இஸ்லாத்தினை அழிக்கும் நோக்கில் முஸ்லிமகளாக தன்னைக் காட்டிக்கொண்டிருந்த முனாபிக்குகளும் இஸ்லாத்தை ஏற்றிராத குறைசியருமே ஆகும் என்பதை மிக அழுத்தமாக எடுத்துக்காட்டுகின்றது.
யுத்த வேளைகளிலும்கூட முதியோரை பெண்களை சிறுவர்களை கொல்லக்கூடாது. பலன்தரும் மரங்களை வெட்டக்கூடாது. எவ்வளவ அழகிய வழிமுறையைக் கற்றுத்தந்துள்ளார்கள். அத்தோடு நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரிகள் ஏராளம்.
'நாட்டுப்புற அறபி முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்த வேளை ஸஹாபாக்கள் அவரைத்துரத்த முன்வந்தார்கள். நபியவர்களோ அவர்களைத் தடுத்து பின்பு அவர் சிறுநீர் கழித்த இடத்தில் நீரை ஊற்றிவிடுங்கள் எனக் கட்டளையிட்டார்கள். பின்பு அம்மனிதரிடம் பக்குவமாக எடுத்துக்கூற அவர் உடனே இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்கின்றார';. இதில் முஸ்லிம்களாகிய எமக்கு போதிய முன்மாதிரி இல்லையா? ஏம் வணக்கஸ்தலங்களை அழிக்கும் அசிங்கப்படுத்தும் மக்களால் இஸ்லாத்தை ஒருபோதும் அழித்தவிடமுடியாது என்பதை ஒவ்வொரு மதத்தலைவரும் முஸ்லிமும் புரியவேண்டும்.
நபியவர்களின் அருமை சாச்சா ஹம்ஸா(ரழி)யை கொலைசெய்த ஹிந்தாவை நபியவர்கள் மன்னித்தார்கள். பத்ருப்போரில் பிடிபட்ட குறைசி இன மக்களை நபியவர்கள் மன்னித்தார்கள். இதுதான் நபியவர்களின் அழகிய பண்பாடு. அந்நிய மக்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்ட வழிகோலிய அம்சங்கள்.
இன்றைய முஸ்லிம்களாகிய நாம் சிறுபான்மை இனமாக இந்நாட்டில் வாழ்கின்றோம்;. இங்கு வாழும் வேற்று இனமக்களில் சிலரால் எமக்கு துயர்களும் இன்னல்களும் சமூக விரோத செயல்களும் அரங்கேற வாய்ப்புக்களுண்டு. இவ்வாறான சூழ்நிலைகளில் நாம் எதிர்ப்பு தெரிவிப்பது மிக அவசியம். எனினும் அவற்றை கடைப்பிடிக்கும் முறைகளில் இஸ்லாமிய நடைமுறைகளை கையாள வேண்டும் என்பது மிக மிக இன்றியமையாதது.
இப்போதய சூழிநிலைகளில் நாடுதழுவிய ரீதியில் சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் இடங்களில் விட்டு விட்டு தொடர்ச்சியாக பிரச்சினைகளும் குழப்பங்களும் தலைதூக்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றின்போது இஸ்லாத்துடனான எமது உறவு பலமடைய வேண்டுமே தவிர பலவீனம் அடையக்கூடாது. இறைவனிடம் தவக்குல்வைத்து சுதந்திரம் சமத்துவம் ஜக்கியம் தழைத்தோங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து அடிதடி என இறங்காமல் சுமுகமான வழிமுறைகளை முதலில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
':உங்களை நோக்கி ஒரு படை வருகின்றது என (விசுவாசிகளிடம்) கூறினால் அவர்களுக்கு அது ஈமானை மேலும் அதிகரித்தது'. (அல்குர்ஆன்)
ஈமானையும் இறைதூதையும் நபிகளாரின் வமிமுறையையும் எடுத்துநடக்கும்போதே சிறுபான்மையாக இந்நாட்டில் வாழும் எமக்கு வெற்றி உண்டாகும். ஓன்றை மட்டும் முஸ்லிம்களாகிய நாமும் மாற்று இனத்தவரும் நினைவில்கொள்ள வேண்டும். முஸ்லிம்களை காயப்படுத்துவதால் நிச்சயமாக ஒருபோதும் இஸ்லாம் அழியப்போவதில்லை. ஏத்தனையோ ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஏற்றோர் துன்புறுத்தப்பட்டனர் கொலைசெய்யப்பட்டனர். இறுதியில் இஸ்லாம் துளிர்விட இஸ்லாத்தை மக்கள் அறிய இவை களம் அமைத்துக் கொடுத்ததே அன்றி இஸ்லாத்தை அழிவுக்குள்ளாக்கவில்லை. முஸ்லிம்களை இஸ்லாத்தை காயப்படுத்த எண்ணியவர்களே முடிவில் கைசேதப்பட்டு இழிவுக்குள்ளாக்கப்பட்டனர். இவற்றை மனதில் கொண்டு நாம் எமது செயற்பாடுகளில் வன்மையைக்கழைந்து அமைதியான முறையினைக் கைக்கொண்டு வெற்றியடைவோம். அல்லாஹ் துணைபுரிவானாக!
அப்படி சகிப்பு தன்மையுடன் இருந்தவர்கள் ஒரு நாளும் இணைவைத்தலுக்கு துணை போக வில்லை இதை விடவும் சிறந்த வலை அவர்களின் மார்கத்தை ஏற்றுக்கொண்டால் எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது
ReplyDeleteமுஸ்லிம் என்ற பெயரை வைத்து கொண்டு மாற்று மதத்தவர்களுக்கு கோடை பிடிக்காமல் அதற்கு ஆதாரம் தேடாமல்
அயோ பாவம் இவரின் மார்க்க அறிவுக்கு ஒரு பாமர மஹான் செய்த தவறுகளை இந்த பௌத்த இந வாதிகளுடன் ஒப்பிட்டு பேசுகிறார்
ReplyDelete