தம்புள்ளயில் பள்ளிவாசலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், அசம்பாவிதம் ஏற்படலாமென அச்சம்
மிகப்பெரிய பள்ளிவாசலொன்றினை நாங்கள் கட்டப் போவதாகவும் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு எதிராகவும் தம்புள்ளையில் 19 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என அஞ்சுகிறோம்.
எனவே ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுமாறு தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபை முஸ்லிம் அமைச்சர்களைக் கோரியுள்ளது.
தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். கோரிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தம்புள்ளை பள்ளிவாசலை வேறோர் இடத்தில் நிர்மாணித்துக் கொள்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை காணியொன்று ஒதுக்கியுள்ள நிலையில் தம்புள்ளையில் பள்ளிவாசலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் தம்புள்ளையில் முஸ்லிம் மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் இடையிலான நல்லுறவைப் பாதிக்கும். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படலாம்.
தம்புள்ளையில் பெரும்பாலான முஸ்லிம் வர்த்தகர்களும் இருக்கிறார்கள் அவர்களது வர்த்தகத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம். அதனால் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யுங்கள் என கோரப்பட்டுள்ளது.
ஏதும் நடந்தபின்புதான் பிச்சைக்கார அமைச்சர்கள் கருத்தே வெளியிடுவர்???
ReplyDelete