ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றியீட்டியிருந்தால், அமெரிக்காவில் நடப்பது இலங்கையிலும் நடந்திருக்கும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியிருந்தால் அமெரிக்காவில் தற்போது நடப்பது இலங்கையிலும் நடந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவத்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதைய எதிர்க்கட்சியினர் அலரி மாளிகையை சுற்றி வளைக்க திட்டமிட்டிருந்தனர் என தமக்கு தகவல் கிடைத்திருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் இது பற்றி தாம் கலந்தாலோசித்திருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாக முன்னதாகவே தற்போதைய பிரதமருடன் அதிகாரத்தை ஒப்படைப்பது குறித்து பேசியதனால் கிளர்ச்சி இடம்பெறவிருந்த சாத்தியங்கள் முடக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டிலும் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது கணனி ஜில்மாட் என குற்றம் சுமத்தியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
His brain works one way .He's a specialist reactionary who
ReplyDeleteonly knows to destroy what is already built .Very soon
people like him must be made to learn lessons