'வடமாகாண அரசியல்வாதிகள் இனவாத, கொள்கைகளில் இருந்து இன்னமும் மாறவில்லை'
வடமாகாண அரசியல்வாதிகள் இனவாத கொள்கைகளில் இருந்து இன்னமும் மாறவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,
சிவாஜிலிங்கம் போன்ற அரசியல்வாதிகளே இவ்வாறு இனவாதத்தை கையாண்டு வருகிறார்கள். மேலும், அமெரிக்க தேர்தலில் ஹிலாரி வெற்றியீட்ட வேண்டும் என்பதற்காக தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார். அதனால் தான் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த அரசாங்கமானது இன ஒற்றுமையை ஆதரித்து, நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி முறையாக செயற்படுகிறது.
ஆனால் சில அரசியல்வாதிகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து மீண்டும் அதனை நாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள் என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும், இந்தவருடம் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அண்ணளவாக 14 இலட்சமாக காணப்படுகிறது. இது கடந்தகாலத்தை விட குறைவாகவே காணப்படுகிறது.
ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதே இதற்கு காரணம். இந்த மூன்று நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது என அருந்திக பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
Post a Comment