Header Ads



பள்ளிவாசல்களைத் தாக்குபவர்கள் யார்..? சூத்திரதாரிகளை பிடியுங்கள் அஸ்வர் கோரிக்கை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் மீது தற்போது அவிழ்த்து விடப்பட்டுள்ள வன் செயல்களை உடனடியாக நிறுத்துமாறு முஸ்லிம் முன்னணியின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று (09) சட்டமும் ஒழுங்கும்  அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சங்கிலித் தொடராக மூன்று பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டள்ளன. கடந்த 30ஆம் திகதி ஹிரியானைத் தொகுதியிலுள்ள தித்தவல்கலை பள்ளிவாசலை இலக்காக வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது அருகிலுள்ள கடை ஒன்று சேதமாகியுள்ளது.
இது குறித்து அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னணிகள் சம்மேளனங்களின் குருநாகல் முன்னாள் பணிப்பாளர் எம்.எச்.எம். பாரூக் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் யார்? யார் இந்தத் தாக்குதல்களை நடத்துகின்றார்கள் என்பதை உடனடியாக கண்டறியுமாறும் அஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரும் தற்போது நாட்டில் இல்லை. முஸ்லிம்கள் மீது  பலவாறும் தாக்குதல்கள் நடை பெற்றன என்று மஹிந்த ராஜபக்ஷ அரசின் கீழ் பலர் குற்றம் சாட்டிய போதும் கூட குருநாகலை மாவட்டத்தில் இப்படியான விடயங்கள் நடந்தேறியதே இல்லை என்பதை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

3 comments:

  1. ஐயோ இவர்ர சமூக அக்கறைக்கு அலவே இல்லையா. அது சரி மாணிக்கமடு விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கையையும் விடல்லயே. தலைவர் அனுமதி வழங்கவில்லை போல...

    ReplyDelete
  2. ஹாஜி நாங்களும் உங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் எங்களுக்கு எல்லாம் தெரியும். மகிநதயுடைய ஆட்சியில் அரபு நாட்டின் ராஜதந்திரிகள் கேட்ட பேரது நீர் தானே எல்லாம் சரி சரியென செரல்லி கட்டார் நாட்டு தூதுவர் பெரத்தி கெரண்டு
    இருக்கும் படி கூறியது உமக்கு தானே. ஒன்றையும் நாங்கள் மறக்கவில்லை ஹாஜி.

    ReplyDelete
  3. Azwar born again and born today. Fooling himself

    ReplyDelete

Powered by Blogger.