ஹஜ் கடமையை நிறைவேற்ற, சம்பளத்துடன் விடுமுறை வேண்டும்
மக்களுக்கு சேவை செய்துவரும் அரச, கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஊழியர்கள் தங்களது மார்க்கக் கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு சம்பளத்துடனான விடுமுறையை வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எம்.ஐ.அபூசஹீட், ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
அரச மற்றும் அரச சார்புத்துறைகளில் கடமையாற்றும் முஸ்லிம் ஊழியர்களின் சேவையை கௌரவித்து இறுதிக்கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு விடுமுறை பெற்றுக் கொள்ளும் போது சம்பளமற்ற விடுமுறையே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் குறிப்பிட்ட மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாமலும் அவர்களுடைய விடுமுறைகளிலும் மேலதிக கொடுப்பனவற்ற விடுமுறையிலும் கழிக்கப்பட்டுவருகிறது.
மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சேவை செய்துவரும் முஸ்லிம் ஊழியர்களின் சேவையை கௌரவித்து வாழ்நாளில் ஒரு முறையாவது சம்பளத்துடனான விடுமுறை வழங்கப்படவேண்டும்.
அவ்வாறு வழங்கப்படுவதன் மூலம் மேலும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் உழைக்கக்கூடிய சந்தர்ப்பமும் அவ் ஊழியருக்கு ஏற்படுவதுடன் சிறந்த சேவையையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ் விடயத்தை பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுப்பதுடன், அமைச்சரவையில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையில் அழுத்தம் கொடுத்து முஸ்லிம் ஊழியர்களுக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முஸ்லிம் அரச மற்றும் அரச சார்புத்துறை ஊழியர்களின் நலன் கருதி சம்பளத்துடனான விடுமுறையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Intha vidayattai Vijeydhasa Rajapaksa vidam koorinaal, ungalai ISIS enru sonnalum solluvaar kavanam...ayya!!
ReplyDeleteவேளை செய்யாமல் சம்பளம் பெறுவதை ஹஜ்ஜுக்கு போகும் உண்மையான முஸ்லீம் எடுக்க மாட்டான் வேண்டுமென்று பிரச்சினை கிளப்பி அரசியல் ஆதாயம் பெற நினைக்கும் இந்த கூத்தாடியை புறக்கணிக்கவும்
ReplyDeleteகடந்த காலங்களில் அரச ஊழியர்கள் எடுக்கும் சம்பளம் அரசாங்கம் வட்டியால் ஈட்டும் பணத்தில் இருந்து கொடுப்பதால் இப்பணத்துக்கு என்ன சட்டம்என்ற சர்ச்சை வந்ததது.அதேபோல் வங்கிகளில் வேலை பார்ப்பவர்கள் நேரடி வட்டப்பணத்தில் சம்பளம் பெறுகின்றார்கள் என்ற சர்ச்சை போனது அதைப்பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.இவ்வாறல்லாம் ஹலால் ஹராத்தை சிந்திக்கும் நாம் ஏன் புனித ஹஜ் கடமையை செய்வதற்கு அரச சம்பளத்தை எதிர் பார்க்க வேண்டும் ,தெளிவான ஒரு அமலை செய்வதற்காக செல்லும் நாம் ஏன் இந்த தெளிவற்ற பணத்தை எதிர்பார்க் வேண்டும்.இவ்வாறு நாம் முன்பின் யோசிக்காமல் பேசுவதால் இனவாதிகள் அதையும் தூக்கிப்பிடிப்பார்கள்,30.40 வருடம் அரச சம்பளம் எடுப்பவர்கள் 20.அல்லது 30நாள் சம்பளத்தை வேலை செய்யாமல் ஏன் எதிர்பார்ப்பது,சிலவேளை அந்தப்பணம் ஹராமாக இருந்தால் ஹஜ்ஜுடைய நிலை என்னவாகும்.
ReplyDeleteகாலத்துக்கும் நேரத்துக்கும் தகுந்த பேச்சாக நான் கருதவில்லை இப்பதிவை, இவற்றை கூற போய் இருப்பதும் இல்லாமலாகும் நேரமும் வரலாம்
ReplyDeleteஇஞ்சியை கொடுத்து மிளகாய் வாங்கிய கதையாய் இது அமைந்து விடாமல்,
சுமூகமாக தீர்க்க வேண்டிய பிரச்சனை..
ஹஜ் செய்பவர்கள், அரசாங்கத்தில் வேலை பார்பவர்களாக இருந்தால் அநேகமானவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்வதற்கு கிடைப்பதில்லை. வாழ்வில் ஒருதடம் செயவது கடமை, அதே போல் அந்த நாள்களுக்குரிய சம்பளத்தையும் யாவரையும் போல் தியாகம் செய்ய வேண்டியதுதான்,
இதை ஒரு தலைப்பாக நீங்கள் இட்டமைக்கு ஆழ்ந்த கவலைகள்
மக்களின் மனதில் சஞ்சலங்கள் ஏட்படக்கூடிய, குழப்பக்கூடிய பதிவுகளை ஒன்றுக்கு இருமுறை சிந்தித்து இடுங்கள்.
ஜப்னா முஸ்லிமின் நலன் விரும்பியும், வாசகனும் ஆகிய நான்
முனாஸ்
சகோதரர் அபூசஹீட் அவர்களே, இத்தருணத்தில் இக்கோரிக்கையை விடுப்பது உசிதமல்ல என நினைக்கின்றேன். அப்படித்தான் இருந்தாலும், உங்களது கட்சியின் தலைமைக்கூடாக அணுகலாமல்லவா? அக்கரைப்பற்றில் விரல் விட்டாவது எண்ணக்கூடிய ஆதரவாளர்களே இல்லாத கட்சியின் அமைப்பாளரான நீங்கள், இக்கோரிக்கையை விடுவது எவ்வளவோ நகைப்புக்கிடமானது. பொதுபல சேனா போன்ற இனவாத அமைப்புகளுக்கு இக்கோரிக்கை நல்ல தீனியாக அமையுமென்பது மட்டும் உறுதியாகும்.
ReplyDeleteHaj is for those who have :Good health , Wealth and
ReplyDeletefitness to travel . No need to do it "at any price."
Why begging from anyone to do it if you cannot
afford it ? Yes all public "servants" are trumpeting
that they serve the country but love to ignore the
fact that they are being paid by the people ! So
public employees are well paid . If they want to do
Haj , it should be out of their pockets !
THIRUMPI VANTHU SALARY YEDUKURE NOKATHIL ORU HAJJ TEVEYA
ReplyDeleteஇந்த கோமாளியின் ஆசையை என்ன என்று சொல்வது,எமது பரிசுத்த மார்க்கம் ஹஜ் கடமையை வசதி படைத்தவர்களுக்கே கடமை ஆக்கி உள்ளது.அப்படி இருக்க அடுத்தவர்களிடம் பிச்சை வாங்கி ஹஜ் செய்ய சொல்ல வில்லை.இந்த நாடு இருக்கும் இந்த சூழலில் இப்படியான விடயங்களை நாம் முன் வைப்பதானது எங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுடன் மென் மேலும் பிரச்சினையை கூட்டவே வழி வகுக்கும் என்பதை மறந்து விட வேண்டாம்.நன்றாக யோசித்து எந்த விடயங்களையும் செய்யுங்கள்.வீண் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.தான் தான் பெரிய ஆள் ஆக வேண்டும் என்று நினைத்து முட்டாள் வேலையை செய்து சமூகத்தை படு குழியில் தள்ள வேண்டாம்.முன் பின் யோசிக்க தெரியாத மடையர்கள் நாட்டில் மலிந்து விட்டார்கள் அதனால் தான் இவ்வளவு பிரச்சினை கூடிக்கொண்டே போகுது.எச்சரிக்கை எச்சரிக்கை .....
ReplyDelete