விக்னேஸ்வரனும், பொதுபல சேனாவும் இனவாதத்தை முன்னெடுக்கின்றனர் - டிலான்
மஹிந்த ராஜபக்ஸ தனது அலுவலகத்திற்கு வாடகை செலுத்த முடியவில்லை என தெரிவித்திருந்தார், பஸிலின் உதவியாலேயே தற்போது மஹிந்த இருப்பதாகவும் அவருடைய நிலைமை மோசமாக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் இன்று -24- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்தவால் வாடகை செலுத்த முடியாத காரியாலயத்துக்கு பசில் ராஜபக்ஸ வாடகை செலுத்தி எடுத்துள்ளதாகவும், அதில் ஒரு அறையினை மஹிந்த ராஜபக்ஷ பெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் விமல் வீரவங்ச மற்றும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிடுவதனை போல மஹிந்தவின் தோல்விக்கு பஸில் பொறுப்புக் கூற வேண்டும் என்பது உறுதியாகுவதாக டிலான் பெரேரா சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமல்லாமல் ஊவா மற்றும் மாத்தறை பகுதிகளில் பின் தங்கிய பிரதேசங்களுக்கு சென்று அரசியல் நடத்தும் பஸில் ராஜபக்ஸ நீதிமன்ற விசாரணைகளுக்கு செல்கின்ற பொழுது மட்டும் சுகயீனத்தை காரணப்படுத்தி வைத்தியசாலையில் தங்கிவிடுகின்றார்.
இதிலிருந்தே நாட்டு மக்கள் ராஜபக்ஸர்கள் தொடர்பினைப்பற்றி விளங்கிக்கொள்வார்கள் எனவும் டிலான் குறிப்பிட்டார்.
மேலும் நாட்டில் விக்னேஸ்வரன் மற்றும் பொதுபலசேனா அமைப்பில் உள்ளவர்கள் அவரவர் பாணியில் இனவாதத்தினை முன்னெடுத்து செல்வதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டது போல இராணுவ ஆட்சிக்கு தங்களுடைய அரசாங்கமோ ஜனநாயக மக்களோ இடமளிக்க போவதில்லை எனவும், சர்வதேசத்திற்கு நேர்த்தியான அரசியல் ஒன்றினை வெளிக்காட்டும் போது அதற்கு எதிராக சில தீய சக்திகள் இவ்வாறான கருத்துக்களையும், இனவாதத்தினையும் வெளிப்படுத்தி வருவதாக டிலான் பெரேரா மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனவாத விக்கியையும் இனவாத ஞானசார என்ற தண்டச்சோறையும் பேசி, அறிக்கை விடுவதற்குத்தான் இந்த டிலான் லாயக்கு.
ReplyDeleteஇந்த இரண்டு இனவாதிகளையும் கைது செய்து, சிறையில் அடைக்கக் குரல் கொடுக்கலாமே!