களுத்துறை பள்ளி தாக்குதல், உடைந்த கண்ணாடியை திருத்துகிறது பொலிஸ்
களுத்துறை ஹீனெட்டிகல ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதலையடுத்து சேதமடைந்த கண்ணாடிகளுக்குப் பதில் புதிய கண்ணாடிகளைப் பொருத்துவதற்கு களுத்துறை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த பொலிஸார் சேதமடைந்த கண்ணாடியின் பரப்பளவை அளவிட்டுச் சென்றுள்ளதாக பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவர் எம்.எஸ்.ஹம்ஷா தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பள்ளிவாசலுக்கு வழங்கும் பாதுகாப்பும் நீடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் ஹீனெட்டிகல பகுதியைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது. இதன் பின்னணியில் வெளிநபர்களே சம்பந்தப்பட்டிருக்கலாமென பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் பொலிஸாரிடம் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கல் வீச்சு சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர். -விடிவெள்ளி-
இனவாதிகள் உடைக்க போலீஸ் சரிப்படுத்தினால் தொடர்கதையாகி விடுமா?
ReplyDelete