Header Ads



மஹிந்தவை பாதுகாக்க, ட்ரம்புக்கு கடிதம் அனுப்பவுள்ள மைத்திரி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிவர்த்தி செய்வார் என நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வில் குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு டொனால்ட் ட்ரம்ப்புக்கு கடிதம் ஒன்றை ஜனாதிபதி அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எமது படைவீரர்களை பாதுகாக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் எதிர்கால அபிவிருத்தி  செயற்பாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. US has committed many crimes around the world and still continuing to do so openly but without any worry of human or animal right violation.

    It is surprising that, we ask them to help us, while they are most crime makers in the world with no UN warning or action on them.

    ReplyDelete
  2. மஹிந்தவை காப்பாற்றும் வேலையில்தான் மும்முரமாக இருக்கிறது அரசாங்கம்

    ReplyDelete

Powered by Blogger.