பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல்துறைப் பேராசிரியராக பீ.எம். ஜமாஹிர் தெரிவு
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் மற்றும் உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான முனைவர் பீ.எம். ஜமாஹிர் அவர்கள் மருதமுனையின் முதலாவது பேராசிரியராக தெரிவாகியுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக உயர் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சையின்போது, திறமை அடிப்படையில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை, மருதமுனையைச் சேர்ந்த முனைவர் பீ.எம். ஜமாஹிர் சிறந்த திறனாய்வாளரும், ஆய்வாளரும், க.பொ.த. உயர்தரத்தில் அளவையியலும் விஞ்ஞான முறையும் பாடத்திற்கான சீர்திருத்தக் குழுவின் வளவாளரும், உளவியல் மற்றும் மெய்யியல் நூல்களின் எழுத்தாசிரியருமாவார்.
முனைவர் பீ.எம். ஜமாஹிருக்கு தற்போது வயது 48 என்பதால் இவர் 10 வருடங்களுக்கு மேலாக பேராசிரியராக சேவையாற்ற வாய்ப்புள்ளதால் வாழ்நாள் பேராசிரியராக திகழும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் நான்காவது பேராசிரியராகவும், முதலாவது மெய்யியல் துறைப் பேராசிரியராகவும் எமது மருதமுனை மண்ணைச் சேர்ந்த பீ.எம். ஜமாஹிர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅம்பாரை மாவட்டத்தின் பேராசிரியர்கள் நால்வரினதும் பெயர்களை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். ஆனாலும் இன்னும் பலர் இருக்க வேண்டும்.