பிடல் காஸ்ட்ரோ, மிருகத்தனமான சர்வாதிகாரி - ட்ரம்ப்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடுமையான சர்வாதிகாரி என விமர்சித்துள்ளார்.
கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் இவரும் ஒருவர்.
கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகிய பின் காஸ்ட்ரோ, தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா ஜனாதிபதியாக்கினார். அதன்பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு இவர் காலமானார். பிடல் காஸ்ட்ரோ மறைவை அந்த நாட்டு மக்கள் பெரும் துக்கதினமாக அனுசரித்து வருகின்றனர். காஸ்ட்ரோவின் மறைவிற்கு உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள
டெனால்ட் ட்ரம்ப், பிடல் காஸ்ட்ரோ கொடுமையான சர்வாதிகாரியாக (மிருகத்தனமான சர்வாதிகாரி) செயல்பட்டார் என விமர்சித்துள்ளார்.
மேலும், பிடல் காஸ்ட்ரோ மறைந்தார் என்ற இரட்டை வார்த்தையுடன் ஒரு ஆச்சர்யக்குறி போட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
BUT Fidale did respected women
ReplyDelete