டொனால்ட் டிரம்ப் எங்களின் இயல்பான, கூட்டாளியாக இருப்பார் - பஷார் அல் அசாத்
பயங்கரவாதத்துக்கு எதிராக தான் வாக்குறுதி அளித்தபடி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்தால், அவர் தங்களின் இயல்பான கூட்டாளியாக இருப்பார் என்று சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் கூறியுள்ளார்.
சிரியாவுடான அமெரிக்காவின் கொள்கை திட்டங்களில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஏதேனும் மாற்றம் கொண்டு வருவாரா என்பதை தாங்கள் சற்று பொறுத்திருந்து பார்க்கப் போவதாகவும் பஷார் அல் அசாத் மேலும் கூறினார்.
தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை நொறுக்கப் போவதாக தனது தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் டிரம்ப் பல முறை வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
I don't accept ISIS. But the Asad is a war criminal
ReplyDelete