Header Ads



முஸ்லிம் பெண்களுக்கு அநீதி - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

ஷரீஆ சட்­டத்தின் பிர­காரம் முஸ்லிம் பெண்­க­ளுக்கு 12 வயதில் திரு­மணம் செய்ய அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் விவா­க­ரத்­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன.

எனவே முஸ்லிம் பெண்­களின் உரி­மையை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இரா­ஜாங்க அமைச்சர் சுதர்­ஷினி பெர்­னாண்டோ புள்ளே தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவ­கார அமைச்சின் செல­வின தலைப்­பி­லான குழு­நிலை விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

நாட்டின் பெண்­க­ளி­னதும் சிறார்­க­ளி­னதும் உரிமை பாது­காக்­கப்­பட வேண்டும். தற்­போது சில பெண்­களின் உரிமை பாது­காக்­கப்­பட வேண்டும். 

இதன் பிர­காரம் ஷரிஆ சட்­டத்தின் பெண்­களின் உரிமை தொடர்பில் பிரச்­சி­னைகள் உள்­ளன. குறிப்­பாக முஸ்லிம் பெண்­க­ளுக்கு 12 வயதில் திரு­மணம் முடிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இது சிறுவர் உரிமை மீற­லாகும். 

அத்­துடன் விவா­க­ரத்து தொடர்­பிலும் பெண்­க­ளுக்கு பிரச்­சினை உள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி சொத்­து­ரிமை விட­யத்­திலும் பல பிரச்­சி­னைகள் உள்­ளன. இதன்­போது பெண்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது. 

ஆகவே இது தொடர்பில் அர­சாங்கம் அவ­தானம் செலுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.  மேலும் முஸ்லிம்  பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். 

விடிவெள்ளி

8 comments:

  1. எத்தனை எருமைகள் இருந்தாலும் வேலை இல்லை இவாளுக்கு பதில் கொடுப்பதற்கு தெரியவில்லை, SLTJ சரி பதில் கொடுக்கட்டும் என்று சொல்லவும் திராணி அற்றவர்கள், இவர்கள் பாராளமன்றத்தில் இருப்பதை விட இல்லாது இருப்பது நல்லம்

    ReplyDelete
  2. Erumaigal enre solliyaachu apram epdi brother reply kuduppaanugal...
    Ellarum sernthu Islaathin sattangalai alicchiduvaanugal....
    Namma Aasaath Saaliya illenna ACJU va parlimentku anuppiruntha pesiruppaangalo....???

    ReplyDelete
  3. இவரால் இலங்கையில் 12 வயதில் திருமண‌ம் செய்து கொண்ட ஒருவரை இந்த நூற்றாண்டில் காட்ட முடியுமா.

    ReplyDelete
  4. இந்தப் பெண், அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை செய்யும்பொழுது, அங்குள்ள மருந்துகளை திருடி, தனது சொந்த டிஸ்பென்சரியில் நோயாளிகளுக்கு கொடுத்து பணம் சம்பாதித்தவர்,

    இந்த திருட்டு, அநீதிகளை பேச யாருமில்லை.

    வந்துட்டா ஷரியா சட்டம் பேசுவதற்கு.

    ReplyDelete
  5. ஆடு நனையிதென்று ஓநாய் அழுத கதை.

    ReplyDelete
  6. அப்படியானால் புத்த தேரக்களும் பாவம் தானே ,சின்ன வயசிலயே துறவறம் ,பெரிய வயசிலயும் கஷ்டம் இது துஸ்பிரயோகம் அல்லவா

    ReplyDelete

Powered by Blogger.