மோசடி குற்றச்சாட்டு தொடர்பில், இலஞ்சஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் - ரணில்
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் தான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர்களை சந்தித்தப் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்வைத்துள்ள கோப் அறிக்கையானது அரசாங்கத்துக்கு வெற்றியை தந்துள்ளது.
கோப் அறிக்கை தற்போது சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி இடம்பெறுமென அவர் தெரிவித்தார்.
இதேவேளை பிரதமர் மற்றும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கூட்டு எதிர்கட்சியினர் முறைப்பாடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment