Header Ads



மரண தண்டனைக் கைதி, சிங்கபூர் செல்வாரா..?

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக பல கோடி ரூபாவை செலவிட தயாராகி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் பரிந்துரை செய்திருந்தனர். எனினும் குறித்த வைத்தியசாலையில் அவரை ஏற்றுக்கொள்ள நேற்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துமிந்த சில்வாவை சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.

முல்லேரியா மோதலின் போது தலையில் துப்பாக்கி சூடு பட்டத்தில் மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டதனால் ஆபத்தான நிலைமைக்கு சென்ற துமிந்த சில்வா தற்போது தீவிர நோய் தாக்கியுள்ளது. இதனால் உடனடியாக உரிய முறையில் சிகிச்சை பெறவில்லை என்றால் அவரது உயிர் மீது நம்பிக்கை வைக்க முடியாதென வைத்தியர் அறிவித்துள்ளதாக சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மாற்றப்படும் சந்தர்ப்பம் இதுவாகும்.

துமிந்த சில்வாவை ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்த வைத்தியர் லக்ஷ்மன் ஜயமானந்தவிடம் இருந்து கிடைக்கும் வைத்திய அறிக்கைகளுக்கமைய, துமிந்த சில்வாவை சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுப்புவதற்கு சிறைச்சாலை ஆணையாளர் நிஷாந்த தனசிங்கவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையில், துமிந்த சில்வா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவரது மூளை பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் தொடர்ந்து மயக்கமடையும் நிலைமையில் உள்ளமையினால் இதற்கு சிகிச்சை பெறுவதற்காக சிங்கப்பூர் அனுப்புவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள விசேட தன்மை என்ற என்றால் சிறைச்சாலை வைத்தியர் இந்த அறிக்கையை தயாரிப்பதில்லை. துமிந்த சில்வாவின் வைத்தியரான மஹேஷிகா விஜேர்தவினால் தயாரிக்கப்படும் அறிக்கை மாத்திரம் சமர்ப்பிக்கப்படும்.

சட்டத்தில் காணப்படுகின்ற பிரிவுகளுக்கமைய துமிந்த சில்வா சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாக அவரது சட்டதரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அது மனித உரிமை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துமிந்த சில்வாவை சிங்கப்பூர் அனுப்பும் கொடுக்கல் வாங்கல்களுக்காக 268 கோடிக்கும் அதிகமாக பணம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது நடந்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து பணம் செலுத்தும் வைத்தியசாலைக்கு மாற்றப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவெனவும், வரலாற்றில் முதல் முறையாக சிகிச்சைக்காக கைதி ஒருவர் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் பதிவாகும்.

இந்த நடவடிக்கையின் பின்னால் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரபலங்கள் பலர் இருப்பதாக குறித்து ஊடகம் தெரிவித்துள்ளது.

2 comments:

  1. People now regret for their selection of this so-called good governance. Unequivocally it's a good-for-nothing government.

    ReplyDelete
  2. த்தூ இது ஒரு நாடு இதுக்கு ஒரு அரசாங்கம் ,அதிலும் நல்லாட்சி அரசாங்கம் ,இந்த நாட்டில் சம்மந்தப்பட்ட யாருக்கும் ஒன்றுமே கிடையாதா?இன்னுங் கொஞ்ச நாளில் இவன் பெயரில் மத வழிபாட்டு தலம் ஒன்று அமைத்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை,

    ReplyDelete

Powered by Blogger.