"ஸ்ரீபாத சமனல கந்தயும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசும் கூலிப்படைகளும்"
-Inamullah Masihudeen-
சிவனொளி பாதமலை (ஸ்ரீபாத- சமனல கந்த) முஸ்லிம்களின் புனித ஸ்தலம் அல்ல. அதற்கு நாம் உரிமை கோரவும் இல்லை. முதல் மனிதர் ஆதம் தொடர்பாக எவராவது உரிமை கோருவதானால் அது முழு மனித வர்க்கத்திற்கும் சொந்தமானது.
கடந்த ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்து வெளிநாட்டுச் செலாவணியை சுற்றுலத்துறையூடாக ஈட்டி நாட்டின் பொருளாதரத்தை கட்டி எழுப்பும் நோக்கில் குறிப்பிட்ட பிரதேசத்தில் ஒரு ஹோட்டல் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிவனொளிபாத மலைக்கருகில் ஹோட்டல் அபுதாபி கெப்பிட்டல் குரூப் என்ற நிறுவனம் பிக்பீல்ட் தோட்டத்தில் ஹோட்டல் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 83 ஏக்கர் 2 ரூட் காணியை கொள்வனவு செய்துள்ளது. தற்போது களஞ்சியசாலையும் விமானம் இறங்கும் தளமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அறபு இராச்சிய இத்திஸாலாத் நிறுவனம் இலங்கையில் ஏற்கனவே செல்டெல் டிகோ சேவையை கொள்வனவு செய்துள்ளது, அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அந்நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அந்த முதலீட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை அரசியல் நோக்கங்களுக்காக பூதாகரப்படுத்தும் நோக்கிலும், இனவெறி நிகழ்ச்சி நிரலுக்கு முதலீடாக்குவத்ற்கும் சில தீய சக்திகள் மட்டரகமான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார்கள்.
ஆச்சர்யம் என்னவென்றால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசுவதுபோல் சில கூலிப்படைகள் சில ஒலி/ஒளி பதிவுகளை வெளியிட்டுள்ளனர், அதனை அறியாமல் முஸ்லிம் இளைஞர்கள் பகிர்ந்து கொள்கின்றார்கள்.
ஸ்ரீ பாத குறித்து மகாவம்சம், சூலவம்சம் அல்லது ஏனைய சிங்கள பௌத்த வரலாற்று ஏடுகளோ, இந்து கிறிஸ்தவ ஏடுகளோ எதுவும் குறிப்பிடவில்லை, மாறாக அறபு கடல்வழி சுற்றுப்ப்யணி இப்னு பதூதாவின் குறிப்புக்களே எடுத்துக் கூறுவதால் அது முஸ்லிம்களுக்கே உரித்தாகும் என முட்டாள்தனமான தீ மூட்டிவிடுகின்ற பதிவொன்றையும் அவதானிக்க முடிகின்றது, குறிப்பாக அதனை சிங்கள மொழியில் செய்துள்ளார்கள்.
ஹலால் சான்றிதழை முஸ்லிம்கள் நிறுத்திவிட்டால் இந்த நாட்டில் உற்பத்தியாகும் பல் ஆயிரக்கணக்கான பொருட்களிற்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்பு இல்லாமல் போகும், அதுபோன்றுதான் அறபு நாட்டு முதலீட்டாளர்களை சீண்டுவது இந்த நாட்டின் பொருளாதரத்திற்கு பாதகமான விளைவுகளையே கொண்டிருக்கும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பின்னால் சர்வதேச சதிகார சக்திகளும் செயற்படுகின்றன என்பதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் குறிப்பாக சமூக ஊடகங்களை பாவிக்கும் இளைஞர்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் இவ்வாறான விடயங்களை அணுக வேண்டும்.
SAITAN is diverting our brothers for an unwanted matter. The hotel matter is a business deal between the government and a hotel group.
ReplyDeleteIt has nothing to do with ISLAM and We Muslims have nothing to do with THIS Mountain, since there is not mention about it in Quran or Hadees.
Rather, Let us spend time in understanding the Quran and Sunnah of Muhammed (sal) and try to live as per the Shareea. Our goal is not this world. Let us prepare our self for the next world and get benefited with the limited time we have in our life.
Let any body hug the mountain and fight for it.
When they keep hand in ISLAM Related matter, let us try to solve the problem in accordance with the LAW.
May Allah Guide us not wasting time for usefulness issues of worldly matters.
M. Rasheed, well said bro..
ReplyDelete