Header Ads



பாராளுமன்றத்தில் விஜயதாஸாவுக்கு பதிலடி கொடுத்த றிசாத்

நாட்டிலுள்ள எந்த ஒரு முஸ்லிம் பிரஜையும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கவில்லை, அவர்களுக்கு உதவி செய்யவும் இல்லை என அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்றைய -19- அமர்வின்போதே இதனை கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையை சேர்ந்த 4 குடும்பங்களின் 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இருப்பதாக விஜயதாச ராஜபக்ஸ கூறியது சுமார் 2 வருடங்களுக்கு முற்பட்ட செய்தி என நான் அறிந்துகொண்டேன்.

இருப்பினும் நாட்டை துண்டாட நினைக்கும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் தண்டனை கிடைக்கும் என அவர் கூறியதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றார். நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது. இதை குழப்புவதற்காக சில தீய சக்திகள் செயற்படுகின்றதாக குறிப்பிட்டார்.

தன்னுடைய பெயரைப்பயன்படுத்தி பொது பல சேனா பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாகவும், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், அப்பாவி முஸ்லிம் சமூகத்தினர் மீது பொய் குற்றங்களை சுமத்தி, அவர்களின் அமைதியை குழப்பும் வகையில் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும்ஈ அவர்களை தூண்டி விடுவதாகவும் அறிவித்தார்.

நாட்டிலுள்ள யாரேனும் ஒரு முஸ்லிம் பிரஜை உலகையே அச்சுறுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தாலோ, அவர்களுக்கு உதவிகளை செய்திருந்தாலோ, அவர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரும் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும், அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரிசாட் பதியூதின் தெரிவித்தார்.

மேலும் கடந்த காலத்தில் நடந்த அசம்பாவிதங்களை மஹிந்த அரசு தடுக்கத்தவறியதாகவும், இதனால் நாட்டு மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

ஆனால் தற்போதைய ஜனாதிபதியோ, பிரதமரோ மீண்டும் அவ்வாறு ஒரு நிலையை ஏற்படத்த இடமளிக்க மாட்டார்கள் எனவும், நாட்டில் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடாது எனவும் தாம் நம்புவதாகவும் பாராளுமன்றத்தில் ரிசாட் திட்டவட்டமாக தெரிவித்தார்.

12 comments:

  1. Enter your comment...அற்புதமான உரை. ஐஎஸ் அமைப்பு இஸ்லாத்துக்கு எதிரானது. அதில் முஸ்லிம்கள் இனணயவேண்டிய எந்த அவசியமுமில்லை.

    ReplyDelete
  2. Masha allah very good sir.we salute you.be active at always.

    ReplyDelete
  3. துணிச்சலும் புத்திசாதுர்யமும் நிறைந்த காலத்திற்கு தேவையுமான உரை பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. You better ask racist CM Vicky about Muslims rehabilitation and resettlement first?

      Delete
  5. நடிகர்களை நம்பி மோசம் போகும் நம் சமூகம் விழிப்புணர்வு பெற அல்லாஹ்விடம் கையேந்துவோம்

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க bro!
      நம் இலைஞர்களின் மனநிலைபற்றி அறிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன்,
      Facebook இல் பிறந்த இடம் California , London , உடையென்னமோ மேலைத்தேய உடை , .fake branded cloths , sunglasses ....
      தனது உண்மையான நிலையை போடவே தயங்கும் ஒரு சமூகம்.
      சம்மாபாதிப்பது வெறும் 500 ஆனால் show காட்டுவது என்னமோ 5000/= சம்பாதிப்பதுபோல். கல்வியில் பின்னடைவு. ஏன் இந்த நிலை ?
      Someone should address the youngsters and change their mentality. Most of them are living a dream life. No reality.

      Delete
    2. Of course. Our Muslim youth is on a dream world, wandering about films, stars, fashion culture, opposite gender forgetting the reality & the need of islamic society. This is the time to awake them for protecting Muslim Ummah.

      Delete
  6. It is a grate example to other Muslim politicians in the parliament and all other council members to voice there disagreement in the justice minister speech also mention IS is NOT A MUSLIM. There is nothing do with muslim, it is international responsibility to capture them not labaling Muslim .
    We can see the other Muslim MP respons to the unbiased speach by justice minister.

    ReplyDelete
  7. It is a grate example to other Muslim politicians in the parliament and all other council members to voice there disagreement in the justice minister speech also mention IS is NOT A MUSLIM. There is nothing do with muslim, it is international responsibility to capture them not labaling Muslim .
    We can see the other Muslim MP respons to the no evidence speach by justice minister.

    ReplyDelete
  8. விஜயதாச ஒன்றும் மடையன் அல்ல. அவர் புத்தியுள்ள மாபெரும் துவேஷி. அவர் என்ன கூறினார் என்று புரிந்து கொண்டு, அவருக்கு பதில் அளித்திருக்க வேண்டும். எமக்கு தெரிந்த வரை அவரது பேச்சி திட்டமிட்ட அடிப்படையில், உள்நோக்கம் கொண்ட, ஒரு உரையாகும். இந்த உரைக்கு விஜயதாசவை நேரடியாக கண்டிக்காமல், ரிசாத் அவர்கள் ஒரு கட்டத்தில் அவருக்கு பாராட்டும் தெரிவிக்கிறார். விஜேதாச முஸ்லிம்களின் மார்க்க விடயத்தில் தலையிடுகிறார். அவர்களுக்குள்ள உரிமையை கொச்சைப்படுத்தி உள்ளார். எல்லாமே அரசியல் இலாபத்துக்குத்தான்.

    ReplyDelete

Powered by Blogger.