பெண்ணின் அழகை விமர்சிப்பதும், வர்ணனை செய்வதும் பாலியல் இம்சையாகும் - அப்துல் அஸீஸ்
மாணவியொருவரின் அழகை விமர்சித்தால் வர்ணனை செய்தால் கூட அதுவும் பாலியல் இம்சையாகுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நடைபெற்ற மாணவர்களும் ஒழுக்க விழுமியமும் எனும் செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஒரு பெண்ணின் அழகை விமர்சித்தால் வர்ணனை செய்தால் அதுவும் கூட பாலியல் இம்சையாகும். அந்தப் பெண்ணுக்கு செய் யும் பாலியல் தொந்தரவாகும். அதேபோன்றுதான் ஒரு பாடசாலை மாணவியொருவரின் அழகை விமர்சித்தால் வர்ணனை செய்தால் கூட அதுவும் பாலியல் இம்சையாகும். 16 வயதுக்குட்பட்ட பெண்ணொருவர் விரும்பினாலும் கூட அப் பிள்ளையை இம்சைக்குள்ளாக்கினால் இம்சையை ஏற்படுத்துபவர் குற்றவாளியாக கருதப்படுவார். இதை தண்டனைச் சட்டம் தெளிவாக கூறுகின்றது.
குடும்பத்தில் வன்முறை ஏற்படுகின்ற போது கணவனோ மனைவியோ இரண்டு பேரும் பேசும்வார்த்தைகளினால் பேச்சுக்களினால் பிள்ளைகள் பாதிக்கப்படுமாக இருந்தால் கணவன், மனைவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமென தண்டனைச் சட்டக் கோவை குறிப்பிடுகின்றது.
21வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புகைத்தல் அல்லது கஞ்சா மற்றும் சுருட்டு போன்றவைகளை வழங்குவதும் குற்றம், அவர்கள் வாங்கப்போவதும் குற்றம், அவர்களை வாங்குவதற்கு அனுப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவர்களை கைதுசெய்வதற்கு சட்டத்தில் இடமுண்டு. விற்பனை செய்பவர்களையும் கைது செய்யமுடியும். ஒரு பாடசாலை மாணவன் அவனது பாடசாலை பைக்குள் அல்லது பாடசாலை உபகரணங்களுக்குள் தேவைற்ற கூடாத ஆபாச படங்கள் வைத்திருந்தால் அதுவும் குற்றமாகும். மாணவர்களின் ஒழுக்க விடயங்களில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சமூக அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
மாணவர்கள் ஒழுக்க விழுமியங்களை மீறி செயற்படும் போது அந்தப் பாடசாலையிலுள்ள ஒழுக்காற்றுக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த மாணவரின் பெற்றோரை அழைத்து அவர்களின் பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பான விடயங்களை எடுத்துக் கூறவேண்டும். பிரதேச மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளருக்கும் அறிவிக்க வேண்டும். அதற்கும் அந்த மாண வன் திருந்தா விட்டால் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியைப் பெற்று பாடசாலையை விட்டு குறித்த மாணவனை இடை நிறுத்த முடியும்.
ஒழுக்கமுள்ள மாணவர் சமூகத்தை கட்டி யெழுப்ப அனைவரும் முயற்சிக்க வேண்டு மென அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment