Header Ads



பேஸ்புக் பயன்படுத்தினால், ஆயுள் அதிகரிக்கும் - அமெரிக்க ஆய்வில் தகவல்

முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துவோரின் வாழ்நாள் அதிகரிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளிவரும் "பிஎன்ஏஎஸ்' ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கலிஃபோரினியா சான் டீயெகோ பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் இணைந்து, முகநூல் பயன்பாட்டுக்கும், மனித ஆயுளுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வை அண்மையில் மேற்கொண்டனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த முகநூல் பயன்பாட்டாளர்கள் மற்றும் அவர்களைக் குறித்த அந்த மாகாண பொது சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
1945-ஆம் ஆண்டு முதல், 1989-ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களும், முகநூலில் கடந்த 6 மாதங்களாக அவர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அந்த ஆய்வில், முகநூலை அறவே பயன்படுத்தாதவர்களைவிட, முகநூல் பயன்பாட்டாளர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
முகநூல் பயன்பாட்டாளர்களைவிட அதனைப் பயன்படுத்தாதவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் அதிகம் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
முகநூல் பயன்பாட்டாளர்களிடையே, அதிக அளவில் முகநூல் நண்பர்களைக் கொண்டிருப்பவர்களும், அதிக படங்கள், தகவல்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவிட்டவர்களும், குறைந்த எண்ணிக்கையில் பதிவிட்டவர்களைவிட நீண்ட ஆயுளைக் கொண்டிப்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக அதிக அளவில் சமூகத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று ஏற்கெனவே பல ஆய்வு முடிவுகள் கூறியதை, முகநூல் அடிப்படையிலான இந்த ஆய்வும் நிரூபிக்கிறது. எனினும், நிதர்சனத்துக்கு அப்பாற்பட்ட, நேரடித் தொடர்பு இல்லாத மாயையான நட்புகளை அதிகம் கொண்டிருப்பவர்களுக்கு முகநூல் பயன்பாடு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது என "பிஎன்ஏஎஸ்' ஆய்வு இதழ் குறிப்பிட்டுள்ளது.

2 comments:

  1. ippa sakaraaththil iruppawarkalum facebook paarparkal

    ReplyDelete
  2. சியோனிச வலைதலத்தை மேலும் விரிவடையச்செய்ய இப்படி ஒரு பிட்டு, அந்த கண்டுபிடிப்பாளர்களும் சியோனிஸ்ட்களாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
    யூத சிறுவர்ரகளுக்கு இந்தச்செய்தி, காட்டூன் போன்றவற்றை இஸ்ரேலில் ஒலிபரப்பி அவர்களின் வாழ்நாளை முதலில் அதிகரிச்செய்யலாமே!

    ReplyDelete

Powered by Blogger.