Header Ads



ட்ராம்பிற்கு மஹிந்த வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ராம்ப் தெரிவானமை புதிய உலக மரபு ஒன்றை உருவாக்கும் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்காக ட்ராமப்பிற்கு வாழ்த்து கூறி வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ராம்;ப்பின் தெரிவானது அனைத்து நாடுகளினதும் இறைமைக்கு முக்கியத்துவம் அளித்து நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாத ஓர் உலக மரபினை உருவாக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க குடியரசுக் கட்சி அரசாங்கம் ஆதரவு வழங்கியதாகவும் அதற்கு நன்றி பராட்டுவதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. மஹிந்த -ட்ராம் இருவரும் ஒரே ட்ரக்கில் உள்ளவர்கள். ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது மிகவும் பொருத்தம். ஆனால் மஹிந்தவின் வாழ்த்து அமெரிக்காவில் ஒரு சாதாரண நபரின் அந்தஸ்த்து மட்டும்தான் ஏனெனில் பதவியில் இல்லாத தோல்வியடைந்த ஒருவரும் வேட்பாளரும் சாதாரண குடிமகனும் அமெரிக்க சட்டத்தில் ஒரே அந்தஸ்த்து தான். ஆனால் தான் ஒரு சனாதிபதி என்ற இறுமாப்பில் தெரிவிக்கும் வாழ்ந்து என்ற எண்ணம் தான் மஹிந்தாவுக்கு. பாவம் பேராசை பெரும் நஷ்டம்.

    ReplyDelete
  2. இப்போது தான் படத்தைப் பார்த்தேன். பூக்கொத்தைப்பார்த்த போது அசாமி ஒரு மரணவீட்டில் வைத்துத்தான் இந்த பாராட்டைத் தெரிவிப்பது போல் இருக்கின்றது. தோல்வியடைந்த மஹி்ந்தாவுக்கு இப்போது அரசியல் பேச எஞ்சியிருப்பது இரண்டு இடங்கள் தான் ஒன்று பன்ஸல அல்லது பெளத்த கோயிலில் ஒதுக்கமாக உள்ள மடம் அடுத்தது மரணவீடு. மக்கள் மனத்துய்மையுடன் தரிசிக்கும் இரண்டு இடங்கள் தான் கோயிலும் மரணவீடும். அந்த மக்களின் துய்மையைக் கெடுக்க துணிந்துவிட்டானே இந்தப் பாவி.

    ReplyDelete
  3. எதிரியின் எதிரி நண்பன்!!!.ட்ரம் முஸ்லிம்களின் எதிரி,நம்ம மாமாவும் அதே சங்கம் நண்பன்தானே?

    ReplyDelete

Powered by Blogger.