பெல்ஜியம் இளவரசர்- ரணில் சந்திப்பு, கிளம்புகிறது சர்ச்சை
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், லோறன்ட் நடத்திய பேச்சுவார்த்தை, அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெல்ஜியம் நாட்டின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடந்த மாதம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெல்ஜியத்துக்கு மேற்கொண்ட பயணத்தின் போதே, அந்த நாட்டின் இளவரசர் லோறன்டை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக பெல்ஜியம் நாட்டின் வெளிவிவகார அமைச்சுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை.
சந்திப்பு நடந்த பின்னரே, பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் சட்டதிட்டங்களை மீறிய செயல் என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன.
Post a Comment