Header Ads



சிறைச்சாலையில் கருணாவுக்கு, தனியான பாதுகாப்பு

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்த கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டின் பேரிலேயே, கருணாவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னர், இன்று காலை கருணா முன்னிலையாகியிருந்தார்.

இதையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட கருணா கொழும்பு பிரதம நீதிவான் கிகான் பிலாபிட்டிய முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

அவரை, டிசெம்பர் 7ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் சிறைச்சாலையில் கரணாவுக்கு தனியான பாதுகாப்பு வழங்குமாறும், கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டார்.

1 comment:

  1. So he massacred many Muslims in eastern province, aayutham thookiyavan aayuthathinaal sethupovaan.

    ReplyDelete

Powered by Blogger.