கொலை - கொள்ளை செய்ததற்காக, நான் நீதிமன்றம் போகவில்லை - கருணா
பாரிய குற்றங்கள் எதனையும் நான் செய்யவில்லை. விரைவில் வெளியில் வருவேன் என விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இன்று கைது செய்யப்பட்டார்.
நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரான வேளை கருணா கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் கருணாவை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தவிட்டுள்ளார்.
இதனையடுத்து சிறைச்சாலைக்கு கைவிலங்களுடன் அழைத்து செல்லப்பட்ட கருணா, அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டார்.
நான் கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டு நீதிமன்றம் போகவில்லை. ஒப்படைக்கப்பட்ட ஒரு இத்துபோன வாகனத்துக்காக அழைத்துள்ளார்கள். விரைவாக வருவேன், கவலைப்படவேண்டாம், உண்மையே வெல்லும்” எனத் தெரிவித்தார்.
ஹாஹாஹா இப்ப தான ஆரம்பம்...
ReplyDelete