பாவத்திற்கு துணைபோகும் பேஸ்புக்
-Jan Mohamed-
பேஸ் புக் மற்றும் வட்ஸ் அப் போன்ற சமூக தலங்கள் தொலைந்து போன உறவுகளையும் நட்புகளையும் தேடிக் கண்டுபிடிக்கவும் நட்புகளை வலர்க்கவும் நல்ல செய்திகளப் பகிர்ந்து குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கவே உருவாக்கப் பட்டன. பேஸ் புக் கண்டுபிடிப்பாளர் காணாமல் போன தன் காதலியை தேடிக் கண்டுபிடிக்கவே அதை உருவாக்கி வெற்றியும் கண்டு அதனை பிறகு பொது மக்களுக்கும் பாவனைக்கு விட்டார். வட்ஸ் அப் மூலம் இனைந்த நண்பர்கள் எத்தனையோ இனைந்த குடும்பங்கள் எத்தனையோ. தென் கொரியாவும் வடகொரியாவும் பிரிந்த போது பிரிந்த குடும்பங்கள் வட்ஸ் அப் மூலம் இணைந்துள்ளன.
எனவே இந்தத் தலங்களை சமூக உறவுகளை மேம்படுத்தும் நல்ல நோக்கிலேயே பயன்படுத்துவது நமது கடமையாகும். வட்ஸ் அப் குழுமங்கள் நல்லவற்றையே பேச வேண்டும் செய்ய வேன்டும் செயல் படுத்த வேண்டும் . மேலும் முஸ்லிம்கள் என்ற வகையிலும் நமது கருத்துக்கள் பேச்சுக்கள் எழுத்துக்கள் இரண்டு சாராரை ஒற்றுமைப்படுத்த வேண்டும் , அல்லது அவர்களை நல்லவர்களாக மாற்ற பங்களிப்புச் செய்ய வேண்டும், அல்லது ஒற்றுமையை மேலும் வளம்படுத்துவதாக அமைய வேண்டும்.
ஆனால் சிலர் இவற்றை தவறான முறைகளில் பயன் படுத்தி வருகின்றனர். ஒருவரை ஒருவர் பழி சொல்லவும், நேரடியாக கூற முடியாததை இதன் மூலம் கூறவும் திறை மறைவு பயில்வான்களாக சிலர் உள்ளனர். இது இஸ்லாத்தின் அடிப்படையிலும் மனித நேயத்தின் அடிப்படையிலும் தவறானவையாகும். இந்த சமூகத் தலங்களால் முஸ்லிம்கள் மத்தியிலும் குடும்பங்களும் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இன்று சிலரால் இவை புறம்பேசும் ஒரு சந்தியாக மாற்றப் பட்டுள்ளது. இவ்வாறான தளங்களில் அங்கத்தவராக இருப்பதும் அதில் எமது கருத்துக்களை பதிவு செய்வதும் தவறானது.
சிலர் தங்களுக்கு இருக்கும் மன நோயை இதன் மூலமாக தீர்க்க முனைகின்றனர். சிலர் இவ்வாறனவர்களுக்கு பண உதவி செய்கின்றனர். எப்படியிருப்பினும் மன் நோய் உடையவர் காலையில் ஒரு கருத்தையும் மாலையில் ஒரு கருத்தையும் இரவில் வேறொரு கருத்தையும் கூறுவார். அவற்றை நம்புவோர் அவர்களும் தம்மையறியாமல் படிப் படியாக மன நோய்க்கு ஆளாகுவர். இறுதியில் சமூக வலைத்தலங்கள் பரஸ்பரம் புறம் பேசி பகைகளை உருவாக்கி மனநோய் கொண்ட சமூகத்தை உர்வாக்கிவிடும் . எனவே தேவையற்ற சமூக வலைத்தலங்களில் சேர்ந்து அதற்கு உதவி செய்து பாவச் சுமைகளை அள்ளிச் சேர்த்து விடாதீர்கள். சமூக இணையத் தளங்கள் கவனம் தேவை.
That's why I refused to use such social networks for unnecessary. This types of social networks are contradicted with Islam. So, be aware of them while using. Consider about the privacy of you and others while using social networks. Because Islam is not allowing to concerns with others privacy without their permissions. Consider is it suitable for Muslim life or not? Think.
ReplyDeleteLet's do something by sitting inside the circle which Quran and sunnah. Let's unite.
Another point I would like to mention here.
ReplyDeleteWhen Islamic talk regarding a woman's clothes, it's published with women photos. we need to avoid this, because it add sin to the person who starts the post and who ever watching it. Some of the post which published with the tight clothing.