ட்ரம்ப்பின் வழியில் கோத்தபாய
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தற்போது சரியான தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் சமீபத்திய வெற்றியின் அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச இதனை நியாயப்படுத்தியுள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவையிட்டு, டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை இலங்கையர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு பாடம் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு வெற்று வாக்குறுதி வழங்கும் அரசியல்வாதிகள் வேண்டாம் என்ற எண்ணம் ஏற்பட்டமையாலேயே டொனால்ட் டரம்ப் வெற்றி பெற்றார். இலங்கையர்களும் இதனை கருத்தில் கொள்ள வேண்டி பாடமாக இது உள்ளது.
இதேவேளை அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, தனது அரசியல் பிரவேசம் குறித்தான தகவலை கோத்தபாய வெளியிட்டிருந்தார்.
எனது நாட்டிற்கு சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயமாக செய்வேன். எனினும் அரசியலுக்குள் நுழைவது குறித்து இன்னமும் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.
எப்படியிருப்பினும் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்கு இன்னமும் மூன்றரை வருடங்கள் உள்ளதாக கோத்தபாய குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"People are sick of career politicians delivering rhetoric instead results" - True! And that's no rocket science for anyone to comprehend.
ReplyDelete"That's the reason Donald won" - ABSOLUTELY WRONG! If the whole circumstance is as per the Constitution of Sri Lanka, Hillary is the president now. You can only mislead people in Sri Lanka.
Bottom Line: It is in your greed that you want to run for president in 2020 and you are starting to lay the foundation.
Have you ever known Donald tweeted- "The Electoral College is a disaster!" and the same electoral college is going to make Donald Trump, president-elect, as the president!
ReplyDeleteMr.Gota
ReplyDeleteI would like to remind you that Mr.Trump is not a Sri Lankan and for that metter you are not a American.We Sri Lankans not required an administrative style as USA has. in addition he is not from swindling history. you and your brothers trying fish in troubled water, btw the water was troubled by your family and clans(lackeys).
dont try to fool around us, and we will not back from teaching you and your family another good teaching.
நீ என்ன வழியில் சென்ராலும் வெளிக்கடவழி நெருங்குது ஸாமி
ReplyDelete