Header Ads



இலங்கை முஸ்லிம் இயக்கங்களின், மிகமுக்கியமான கூட்டு அறிக்கை (தவறாமல் வாசியுங்கள்)


இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மார்க்கமாகும். இந்தவகையில் சமூக உறவுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. 

மதங்களுக்கிடையில் வீண்பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் விதத்தில் முஸ்லிம்கள் செயற்படக்கூடாது என்றும்; அடுத்தவர்களின் மத உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது. 

இஸ்லாத்திற்கு எதிரான செயற்திட்டங்கள் எந்த சக்திகளின் மூலம் முன்னெடுக்கப்பட்டாலும் அவர்கள் செயற்படும் பாணியில் அதை எதிர்கொள்வதை இஸ்லாம் ஏற்கவில்லை. தீமையை நன்மையைக் கொண்டு தடுக்குமாறும் தீமையை சுட்டிக்காட்டும் போது மென்மையான முறையில் பேசுமாறும் பிறமதத்தவர்களது உள்ளங்கள் புண்படும் விதத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

பிறமதங்களை நிந்தனை செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் அதேநேரம் பிற மதகுருமார்களுடன் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறும் வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் இப்போதனைகளைப் புறக்கணிக்கும் விதத்தில் எழுதுவதையும் பேசுவதையும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  

எந்தவொரு முஸ்லிமும்; பிற சமூகங்களது சமய நடவடிக்கைகளையோ மத குருமார்களையோ இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடுவதை நாம் கண்டிப்பதுடன் இது இஸ்லாமிய நடைமுறைகளுக்கும் போதனைகளுக்கும் முரணானது என்பதையும் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

மேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் புனித நூலான அல்-குர்ஆனையும் கொச்சைப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் கண்டிப்பதோடு, இவற்றில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அது எம்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதக விளைவுகளையே ஏற்படுத்தும்.

அத்துடன் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றைத் தடுக்க அரசு முனைப்;புடன் செயற்பட வேண்டும் என்றும், முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை முஸ்லிம் சமய, சமூக தலைமைகளுடன் ஆலோசிப்பதன் மூலமே சிறந்த முடிவுகளை அடைய முடியுமென்பதையும் அரசுக்குக் கூறிக்கொள்கின்றோம். 

All Ceylon Jamiyyathul Ulama - ACJU 
All Ceylon Young Muslim Men’s Association Conference - YMMA
Sri Lanka Jama'athe Islami – SLJI
Sri Lanka Shariee’ah Council
All Ceylon Thowheedh Jama’ath –ACTJ
Sri Lanka Islamic Center
World Assembly of Muslim Youth – WAMY
Jama'ath Ansaris Sunnathil Mohammadiyya - JASM
All University Muslim Students Association - AUMSA
Jama’athus Salama
International Islamic Relief Organization- IIRO
Association of Muslim Youth of Sailan (Sri Lanka) - AMYS
Muslim Council of Sri Lanka - MCSL
National Shoora Council – NSC
Colombo District Masjid Federation - CDMF 
Al Hikma Welfare Association
All Ceylon Muslim Educational Conference - ACMEC
All Ceylon Union of Muslim League Youth Fronts - ACUMLYF
Jama’ath ut Thowheed
Rapid Response Team - RRT
Sri Lanka Muslim Media Forum – SLMMF
Sri Lanka Islamic Student’s Movement
Advocacy & Reconciliation Council

26 comments:

  1. Replies
    1. They always fish in the troubled pond... Because of SLTJ, muslims are going to face many problem in Sri Lanka...

      Delete
    2. How about ur kabir vanagikal.?

      Delete
  2. A good attempt for better then nothing. BUT I request to the above groups to understand the necessity of unity among us and just know the difference which will happen if we united under one circle (Quran and sunnah) without representing a group.

    So, DESTROY the above groups yourselves and welcome to unite under Quran and sunnah as one unity. We will build the future for our generations with unity of every Muslims without stick to groups.

    ReplyDelete
    Replies
    1. Are they ready to sacrifice to bring Islam ib its pure form by preaching and teaching and follow the revealation Qur'an and sunna without distort?

      Delete
    2. Are they ready to sacrifice to bring Islam ib its pure form by preaching and teaching and follow the revealation Qur'an and sunna without distort?

      Delete
    3. We don't need to stick to groups if we really follow the Quran and sunnah in his way. So, the groups are taking advantages to make us lazy to fulfill the perspective of an unknown person.

      I agree some groups are doing much social services but it should not be done to sell Islam as crating groups and making branch offices, doing press meetings etc.

      I would like to ask one question. Prophet Jesus will come one day and he will fight with kafirs and he will rule the world. My question is. In which group prophet Jesus will join if this groups are purely followed Quran and sunnah? he will never join with the silly groups but he will join with the MUSLIMs who really follow Quran and sunnah.

      Groups will cheat us one day. They will move us to sirk one day.

      The groups will destroy our eeman one day. My dua is to destroy every groups in the world and should unite under one group which is MUSLIM.

      So we will unite as Muslims in the way of Quran and sunnah.

      Delete
  3. WHO IS AGREED THAT " JAMA'ATH ANSARIS SUNNATHIL MOHAMADIYA" IS ISLAMIC OR MUSLIM ORGANIZATION???
    ARE THERE ANY PROOF FOR THAT??

    ReplyDelete
  4. ஹ்ம்ம் 21 இஸ்லாமிய அமைப்புகள் இதுவும் இந்த சின்னஞ்சிறிய இலங்கையிலா அதுவும் இன்னும் இஸ்லாம் தொடர்பான பல அமைப்புகள் இதில் அடங்க இல்லை போலும் எது எப்படியோ இவ்வளவு அமைப்புகள் இருந்தும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கிடைத்த வழிகாட்டுதல்கள், நன்மைகள் எந்தளவுக்கு கிடைத்தது என்றுதான் யோசிக்க தோன்றுகின்றது (ACJU வை தவிர ). அதாவது இலங்கையில் உள்ள முஸ்லிம் பெயரில் உள்ள அரசியல் கட்சிகள் போல்.

    ReplyDelete
  5. All the groups will agree with such decisions except SLTJ.

    ReplyDelete
  6. முஸ்லிம்கள் உண்மையிலே நிம்மதியாக வாழ வேண்டுருமென்றால் தௌஹீத் ஜமாத்தை தடை செய்யவேண்டும்.இலங்கையில் எப்போது தௌஹீத் இயக்கம் ஆரம்பிச்சதோ அன்று இருந்து முஸ்லிம்களுக்கு தலைவலியும் ஆரம்பிச்சாச்சு!

    ReplyDelete
  7. கூடியசீக்ரம் coming soon....
    ISLAMIC HIGH COURT OF CEYLON
    அமைப்புகளுக்கு இருக்கு ஆப்பு

    ReplyDelete
  8. SLTJ இதில் இல்லை. பல பிரிவுகளாக இருந்த முஸ்லிம்கள் இப்போது இரண்டு பிரிவாகிருக்கிறார்கள். முன்பை விட இப்போ தான் அபாயகரமானது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. Why hesitate to publish my comment?

    ReplyDelete
  10. Can all these organisations please publish your last year performance? Including what have done uplift to muslims in Sri Lanka.


    ReplyDelete
  11. SLTJ will not sign. Because they are not for politicians. They are for Muslim community...sltj is the active organization... remember one thing media conference will not be worked out... these organizations can do only media conference like political leaders.. nothing will happen...

    ReplyDelete
  12. Beruwilayil thableegh thawheed thareeka multi mozi kolayum nadandazu.shinghalawar thaakkumpozu entha werupaadum parkailla.izupirahum appadi nadandazu entru Illa.anaiwarum kaaladiyil yoshikkama iniyawazu otrumapadunka.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீரகள் bro. எதிரிகளுக்கு நாம் அனைவரும் "தம்பியா" தான் . பல இயக்கவாதிகள் இதை உணர்வதாக இல்லை.

      Delete
  13. SLTJ வந்ததும் ஏனைய தவ்ஹீத் வாதிகளுக்கு இருந்த எதிர்ப்பும் (மற்றைய ஜமாத்துகள்,இயக்கங்கள்) ஏனைய தவ்ஹீத் வாதிகள் மற்றைய இயக்கங்களுக்கு இருந்த வெறுப்பும் காணாமல் போய் ஓன்று பட்டுள்ளார்கள் அப்ப இந்த ஒன்றுபட்டவர்கள் (SLTJ வருவதக்கு முன்பு வழிகேட்டில் இருந்தவர்களும்,தாம் நேர்வழியில் இருப்பதாக மார்தட்டியவர்களும்) ஒன்றே இப்ப மக்கள் சிந்திப்பார்கள் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  14. ஓ சட்டை மீது எத்தனை பொத்தன்!
    ஹ.க் ,ஹா!
    மேலே ஒரு லிஸ்ட் என்னங்க? இங்கிளீஷ் படம் மஉடிஞ்சி போர் எழுத்துபோல?

    லெட்டர் பேற் கொம்பனிகள் இவ்ளோ நாள் எங்கே போனிங்எஎங்க?
    முஸ்லிகளுக்கு பிரச்சினையான போத?
    ,

    ReplyDelete
  15. BBS idula illaye. Solli irundaal awarhalum sign panni iruppaarkal

    ReplyDelete
    Replies
    1. Athu than neega kabur vanaki irugirinkala

      Delete
  16. ஈமான் எங்கு உள்ளதோ அங்கு கட்டாயம் அல்லாஹ் சோதிப்பான்،قال الله تعالى -الم احسب الناس ان يقول آمنا وهم لا يفتنون،நபிமார்கள் எவ்வளவோ யுத்தம் செய்தார்கள் கஷ்டப்பட்டார்கள்,அவர்களின் ஏதாவது கஷ்டப்பட்டுள்ளோமா?மார்க்கத்துக்கோ அல்லது நபிமார்களுக்கோஅவதூறு வந்தாள் ,ஏதாவது செய்துள்ளோமா?الله اعلم ،

    ReplyDelete
  17. We read it and of course we wait for this...!
    Because they are altogether now against SLTJ as they do it always..!
    No any of the above listed team with clear face but all of them are acting for money....and we know all of these crook got pressure from tops to do so...
    Mind it, they can not remove at least single hair (Mayiru) of the SLTJ... and SLTJ do afraid only for Allah (almighty)

    ReplyDelete
  18. Dear brothers! You are kindly requested to use the words when you are commenting.

    You should understand first the problem is not the protest. We should protest in a decent menner in order to get our rights. But it should not in the way of how the non-Muslims followed(legacy). We have to make a new trend of protest evidenced by Quran and sunnah.

    Thus, we should not represent any groups while protesting for our community based problem. Because it might be neglected. So, we should unite each and every Muslims in order to fight against injustice.

    So, there is no use to blame why they protested (SLTJ). But we should be aware in the future to wake up & unite everyone to fight against injustice.

    Past is past. Leave the nonsense what the SLTJ done and welcome to unite everyone under Quran and sunnah to fight or protest in a decent menner against Injustice.

    We are Muslims. We should not behave like stupidest. So, do not blame the protest but show them what the errornious have done while the protest by SLTJ or others.

    And SLTJ and other groups, you are kindly requested to DESTROY your groups and welcomed to unite as Muslims under Quran and sunnah then you continue as its is how you did your social services. Don't use Islam to your hypocrites.

    Your people's have any answer? In which groups prophet Jesus will join when he comes to rule the world in the future? So why this groups cheating the innocent people's.

    I pray for Allah to destroy every groups in order to unite them under Quran and sunnah As Muslims.

    Allah Kareem.


    ReplyDelete
  19. 23 முஸ்லிம் அமைப்புக்கள் கொழும்பில் கூட்டம் நடத்தி முஸ்லிம்களுக்கு புத்திமதி சொல்லியுள்ளார்கள். இந்த இயக்கங்களில் பல சிலரை மட்டும் கொண்டு பல பெயர்களில் இயங்குபவை. அத்துடன் இந்த 23 இயக்கங்களில் கிழக்கு தலைமையிலான ஒரு அமைப்பும் இணைக்கப்படவில்லை என்பதன் மூலம் கிழக்கு முஸ்லிம்கள் பிரதேச வாதம் பார்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தில் பதிவு பெற்றுள்ள பல இயக்கங்கள் இவர்களுக்கு ஜால்ரா அடிப்பதில்லை என்பதாலும் அவைகளை ஓரம் கட்டியுள்ளார்கள்

    ReplyDelete

Powered by Blogger.