Header Ads



பணத்தை பறிக்க, அரசாங்கம் முயற்சி - மஹிந்த குற்றச்சாட்டு

நேற்றைய தினம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், மக்களின் நிவாரணங்கள் துண்டிக்கப்பட்ட ஓர் வரவு செலவுத் திட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் எவ்வித அர்த்தமும் அற்ற வரவு செலவுத் திட்ட யோசனை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டதாகவும் இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களிடமிருந்தும் பணம் பறிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றில் சேவை பெற்றுக்கொள்ள செல்லும் மக்களிடம் வரி அறவீடு செய்யப்பட உள்ளதாகவும் கடன் பெற்றுக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் கடன் பெற்றுக்கொண்டு எதனை சாதித்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ள அவர் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. கடன் பெற்று உமது அரசு பெற்ற கடன்தான் அடைக்க படுகிறது இது தெரிந்தும் தெரியாத போல...

    ReplyDelete
  2. ஆடு நனைந்ததை எண்ணி ஓநாய் அழுத கதை

    ReplyDelete
  3. You are just an ordinary MP? Is there any body care you in SL parliment?

    ReplyDelete
  4. Neengal anna seizeerhal .!velinattukku natti thaarai vatthu ungalukku vaal aattiyawarhalukku pangu weittheerhal.ezalanal pozu makkalukku antthap payanum ilai

    ReplyDelete
  5. நீர் சரியாக செய்திருந்தால் இப்ப மக்கள் ககஷ்ப்பட வேண்டியதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.