Header Ads



மீண்டுமொரு இனக்கலவரத்துக்கு அரசு துணைபோகின்றதா - முன்னாள் அமைச்சருக்கு சந்தேகம்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

தலை தூக்கிவரும்  இன, மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றது. அதனால் மீண்டுமொரு இனக்கலவரத்துக்கு அரசாங்கம் துணைபோகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையிலல்,
அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் எமது கருத்துக்களையும் நாம் சமர்ப்பித்துள்ளோம். இந்த நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிவருகிறோம். அத்துடன் அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தத்தினூடாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு இன, மத பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும் நாட்டுக்குள் தலைதூக்கிவரும் இன, மத அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை. இவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவேண்டும்.
ஏனைய இன,மதங்களுக்கு எதிரான பிரசாரம் மற்றும் தூண்டுதலை தடுப்பது அரசாங்கத்தின் கடமை..அத்துடன் மதங்களுக்கு எதிராக யாரேனும் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அற்கு எதிராக அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்வதாக தெரியவில்லை. அதனால்தான் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துவருகின்றன.

1 comment:

  1. Champika and the Rathana(thera)are the main culprits,so no solution in yamapalana too.(those two behind the BBS).

    ReplyDelete

Powered by Blogger.