விஜயதாசவின் கூற்று, ஞானசாரரின் இனவாதத்திற்கு சமனானது
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியிருப்பது ஞானசார தேரரின் இனவாதப் பேச்சை ஒத்ததாக அமைவதோடு தெற்கில் உள்ள சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
தேசிய தொலைக்காட்சி நேத்ரா அலைவரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற 'வெளிச்சம்' நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்தி ஆற்றிய உரை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் எந்த ஒரு முஸ்லிம் நபரும் சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புகளுடன் தொடர்வோ அல்லது அதன் உறுப்பினராகவோ இல்லை என இராணுவப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பகிரங்கமாக கூறியிருந்தார்.
ஆனால் இன்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதற்கு முற்றிலும் முரணாக இலங்கையைச் சேர்ந்த 32 பேர் சிரியாவில் இருக்கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றார். அமைச்சரின் இக்கூற்றானது ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கெதிராக பேசுவதைப் போன்றதாகவே காணப்படுகின்றது. இலங்கை அரசு சிறந்த புலனாய்வுப் பிரிவைக் கொண்டிருக்கின்ற நிலையில் உண்மையினை அறிந்து கொள்ளாமல் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தேவையற்றதாகவும் வீண் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் அமைகின்றது.
நாட்டில் தற்போது இடம்பெறுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அரசுக்கெதிரான கூட்டு எதிர்க்கட்சியினால் மூட்டி விடப்படுகின்ற தீயாக இருக்குமானால் இத்தீயினை அனைக்கும் வகையிலான அரசின் நடவடிக்கையாக இனப்பிரச்சினையை தூண்டுகின்ற ஞானசார தேரர் மற்றும் பல இனவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
வெளிநாட்டவர்கள் அரபு மதரசாக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம், பயங்கரவாதம் போன்ற சிந்தனைகளை விதைத்து மாணவர்களை மூளைச்சலவை செய்கின்றனர் என்று நீதி அமைச்சர் பொறுப்பில்லாத விதத்தில் பொய்க்; குற்றம் சுமத்தி இருக்கின்றார். இவரின் இக்கூற்று தெற்கில் உள்ள சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு எரிகின்ற நெருப்பில் பெற்றோல் ஊற்றுவதுபோன்று அமைகிறது. எனவே இதை ஒரு பாரதூரமான விடயமாக பார்க்க வேண்டியிருக்கின்றது.
இந்த நாட்டின் நீதி அமைச்சர் பெரும்பான்மை சமூகத்தில் தன்னுடைய அரசியலை மையப்படுத்தி பேசுகின்ற ஒரு பேச்சாக அமைந்துள்ளது. அவர் சார்ந்த சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக இன்னுமொரு சமூகத்தின் மீது வீண்பழி சுமத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பௌத்த விகாரைகள் பயங்கரவாத பயிற்சி வழங்குகிறது என்று எங்களாலும் பேச முடியும். ஆனால் அவ்வாறு பேசி இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் சீர்குலைக்க வேண்டிய தேவை எமக்கில்லை. இவ்விடயம் சம்பந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வேண்டிக்கொண்டார்.
நீதியே இல்லாத ஒருவர் நீதியமைச்சர்! நாடு நாசமாய் போவதை தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை .அல்லாஹ்தான் நம்மனைவரையும் பாதுகாக்க வேண்டும் .
ReplyDeleteஏன் நீங்கள் ஆதாரங்களை காட்டுமாறு நீதி அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?
ReplyDeleteThank you very much for your comment. But actually he is speaking in Parliament under privilege. Cannot be sued.
DeleteHis intention is very clear. Push us to defensive mentality. Which will paralize our Dawah. We have to make it clear we never & ever compromise to stop coming foreign scholars or foreign Dahis here. That's our right.
ReplyDelete@ajan antonyraj, அதை நாங்கள் ஜனநாயக வழியில் பார்த்துக் கொள்கிறோம், உன் கேடுகெட்ட பாசிஸ ஈனப் புத்தியை இங்கு காட்டாதே. உன்னையெல்லாம் இந்த ஏரியாவுக்கே வரவேண்டாம் என்று மூஞ்சில காறித் துப்பினாலும் ரோசம் வரல இல்ல. அதுசரி மானம் என்பது பிறப்பில் இருந்து வரனும், அடுத்தவன்கிட்ட பிச்சை கேட்டு வந்தா இப்படித்தான் இருக்கும்
ReplyDelete@Ilays, உங்கள் ஏரியாவா?, அது எங்கே இருக்கு?
Deleteநீங்கள் நல்ல கமேடி பீசு தான்.
This comment has been removed by the author.
ReplyDeleteசெருப்படி படனும்ன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுற ஈன சாதி உன்னை என்ன சொல்லுறதுன்னே தெரியல
ReplyDelete