எகிப்தில் இலங்கை மாணவன் சாதனை
கலாநிதி முஹம்மது முபீத் லபீர் இவர் திருகோணமலை மூதூர் நொக்ஸ் வீதியைச் சேர்ந்தவர். 1980 /05/02 ஆம் ஆண்டு முஹம்மத் லபீர் யுசுப் மற்றும் நசீதா உம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர்.
இவர் 1985 ஆம் ஆண்டு மூதூர் மத்திய கல்லூரியில் தனது கல்விப் பயணத்தை ஆரம்பிக்க முதல் காலடி பதித்தார் .
இவர் தனது ஆரம்ப மார்க்க கல்வியை 1990 ஆம் ஆண்டு நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் மனனப் பிறிவில் சேர்ந்து 2 வருடத்தில் அல் குர் ஆணை மனனம் செய்து அல் ஹாபில் பட்டம் பெற்று அதே கல்லூரியில் 1993 ஆம் ஆண்டு 7 வருடபாட நெறிகொண்ட கிதாப் பிரிவில் தனது படிப்பை தோட்ர்ந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் 2000 ஆம் ஆண்டு இக்கல்லூரியில்இருந்தே எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகதுக்கு தெரிவானார் .
அதைத் தொடர்ந்து தனதுமேற்படிப்புக்காக 2000/08/24 ஆம் ஆண்டு எகிப்து பயனமானார்,
உலக பிரசித்திபெற்றதும் மற்றும் பழமை வாய்ந்ததுமான அல் அஸ்ஹர் பல்கலைக் கலகத்தில் உயர் தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற்று ஷரீஆ மற்றும் சட்டக்கல்லூரிக்கு தெரிவானார் அதில் 5 வருடம் ( 2001- 2006) கற்று தனது கலை மானிப் பட்டத்தைப் (BA) பெற்றார்.
இதனை தொடர்ந்து அதே பல்கலைக்கலகத்தில் 2007 – 2008 (MA) முது மானிப் பட்டதையும் 2009 – 2011 ஆம் ஆண்டு MPhil பட்டதையும் பெற்றார்.
தனது கலா நிதி பட்டப் படிப்பை ” நிதிக் கொள்கைக்கும் நானையக் கொள்கைக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துவதட்கான காரணிகள் “ ( இஸ்லாமிய பொருளாதார கொள்கைக்கும் உலகப் பொருளாதாரக் கொள்ள்கைக்கும் மத்தியில் ஒப்பீட்டு ஆய்வு ) எனும் தலைப்பில் அதே பல்கலைக்கழகதில் 2011 ஆம் ஆண்டு பதிவு செய்து, 2016/11/24 ஆம் திகதி அதாவது நேற்று தனது கலா நிதிபட்டத்தை (PHD) மிகச்சிறந்த பெறுபேற்றுடன் தனது கல்விப் பயணத்தை முடித்திருக்கிறார் .
இவர் மூதூர் ஈன்றெடுத் கன்னி கலா நிதி என்பதும் குறிப்பிடத்தக்கது .
அல்லாஹ் இவருக்கு சிறந்த எதிர் காலத்தையும் தனது கல்விப் பயணத்தில் இன்னும் முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும். அல்லாஹ் இவர் மூலம் மூதூர் மண்ணுக்கும் எம் இலங்கை உலக முஸ்லிம்களுக்கும் சிறந்த சேவையினை செய்ய வாழ்த்துகிறோம் .
தகவல் :
கஸீர் அஸ்ஹரி.
May Allah Bless Him and Make Him travel in the path of SALAF us saliheens.
ReplyDeleteMashallah .Welldone Dr.Mufeer.Hope u commit yourself Dawa activities.
ReplyDeleteبارك الله فيك وطول حياتك
ReplyDeleteCongratulations!
ReplyDeleteI am keeping my valuable dua for his success life ..
ReplyDeleteAameen
ReplyDeleteMy complements to him. May almighty Allah bless and bolster him to disseminate immaculate Islam far and wide!
ReplyDeleteMasha Allah I wish him all the best and do well in the future
ReplyDelete