Header Ads



அதிகாரிகளை கடுமையாக திட்டிவிட்டு, வீடு திரும்பினேன் - சிரந்தி

நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு விசாரணைக்காகச் சென்றிருந்த போது, நான் குறித்த அதிகாரிகளை கடுமையாக திட்டிவிட்டு வீடு திரும்பினேன் என முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எந்த தவறையும் செய்யாத பட்சத்தில் தன்னை விசாரணைக்காக அழைத்திருந்தார்கள். எனவே, தனது கணக்காளர் மூலம் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு சென்றதாகசிரந்தி குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளியாக இல்லாத பட்சத்தில் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, எனவே நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகளை திட்டியதாகமகிந்தவின் மனைவி தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞராகிய தனது மகன் நாமல் மற்றும் சிரேஸ்ட வழக்கறிஞர்கள் இருவருடன் சென்றதாகவும், தான் ஏதாவது தவறு செய்திருந்தால் அவர்கள் ஆவணங்களை சோதனையிடும்போது இருந்திருக்கும் அப்படி என்றால் நான் எனது தவறுகளை ஒப்புக் கொண்டிருப்பேன் என சிரந்தி கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சிரந்தி ராஜபக்ச மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார். 

2 comments:

  1. Yahapalanaya is becoming a joke for Mhanida & company because of my3.

    ReplyDelete
  2. மகா புண்ணியவதியான தாயே! நீங்கள் சுத்தவாளி. வாழ்க்கையிலே எந்த தவறும் செய்யாதவர்கள்.நாட்டு மக்களின் சொத்துக்களை சத்தியமாக நீங்கள் கொள்ளையடிக்கவில்லை என்பதை பொதுமக்களாகிய நாம் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் உங்களுக்கு புதிய உத்வேகமும் கம்பீரமும் வரக்காரணம் என்ன என்பதையும் நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம். யஹபாலன அரசு உங்களை சிறையில் அடைக்கமாட்டாது என வாக்குறுதி அளித்திருப்பது தான் உங்கள் தைரியத்தின் இரகசியம் என்பதையும் அறிவோம். ஆனால் பொதுமக்களின் சொத்துக்களை சுரண்டி, களவாடி, ஆயிரமாயிரம் மோசடியில் ஈடுபட்டு இந்த நாட்டைக்குட்டிச் சுவராக்கிய உனக்கு கடவுள் எந்த சந்தேகமும் இன்றி இந்த உலகிலும் கண்டிப்பாக மறுமையிலும் தண்டிப்பான் என்ற நம்பிக்கை எமக்குப் பூரணமாக இருக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.