பிறப்புச் சான்றிதழில், 'இனம்' குறிப்பிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை
பிறப்புச் சான்றிதழில் இனம் குறிப்பிடப்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.
ஆகவே விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள பிறப்புச் சான்றிதழ் இலத்திரனியல் அட்டையில் இனம் குறிப்பிடப்பட மாட்டாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையர்கள் அனைவரும் நாட்டிலுள்ள மும்மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படும். அத்துடன் நல்லிணக்கத்துக்குப் பாதகமான விடயங்களை இனம்கண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பிறப்பின்போதே எம்மை இனரீதியில் பிரித்து விடுகின்றனர். பிறப்புச் சான்றிதழில் இனம் உள்ளடக்கப்பட்டிருப்பதால் அதுவே முதல் எமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது. எனவே பிறப்புச் சான்றிதழில் இனம் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.
இ்விடயம் தொடர்பில் நான் பிரதமரிடமும் பொது நிர்வாக அமைச்சரிடமும் பேசியுள்ளேன். இது நல்ல சிந்தனை என பிரதமரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் பிறப்புச் சான்றிதழ் இலத்திரனியல் மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் இனம் இடம்பெறமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment