ACJU க்கு பொதுபல சேனா கடிதம் - பாராளுமன்றத்தில் ஹரீஸ் எச்சரிக்கை
இறை வேதமாகிய புனித திருக்குர்ஆனை கேள்விக்குட்படுத்த எவருக்கும் முடியாது. குர்ஆன் பற்றி தேவையற்ற வியாக்கியாணங்களை முன்வைத்து இனவாதத்தை தூண்டுகின்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் சூளுரைத்தார்.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தொடர்பான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று (28) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதி அமைச்சர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்.
ஊடகச் சுதந்திரம் என்ற போர்வையில் இந்த நாட்டின் தெற்கில் உள்ள சில அடிப்படைவாதிகள் சிறுபான்மை மக்களின் மதச் சுதந்திரத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் ஏனைய மதங்கள் தொடர்பான தவறான புரிதலை ஏற்படுத்த விளைகின்றனர். இது விரும்பிய மத்ததை பின் பற்றுகின்ற மதச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கையாக காணப்படுகின்றது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவருக்கு நேற்றைய தினம் இஸ்லாமியர்களின் புனித மார்க்கமான இஸ்லாம், பிற மதங்களை நிந்தனை செய்வதை பிரதான கோட்பாடாக கொண்டுள்ளது எனக்கூறி குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கோரி பொதுபல சேனா அமைப்பினர் கடிதம் எழுதியுள்ளார். இது தேவையற்ற வீண் பிரச்சினையினை உண்டுபண்ணும் விதமாக அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் தம் உயிரிலும் மேலாக நேசிக்கின்ற புனித அல்-குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வேத நூலாகும். இவ்வேத நூலை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது.
முஸ்லிம்கள் மிகவும் நேசிக்கின்ற புனித குர்ஆனை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களின் உள்ளங்களை காயப்படுத்தி, உணர்வுகளைத் தூண்டி, ஆத்திர மூட்டுவதன் ஊடாக பாரிய பிரச்சினைகளை இந்நாட்டில் தோற்றுவித்து நாட்டினை வேறு திசைக்கு இட்டுச் செல்ல முனைகின்றனர்.
நாட்டில் நல்லாட்சி மலர்வதற்கு பெரும் பக்க பலமாக இருந்த இச்சமூகத்தின் மீது மத அடக்கு முறைகளை திணிப்பதன் மூலம் இச்சமூகத்தை சீண்டுபவர்களுக்கு எதிராக அரசு உடனடியாக தலையிட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான சட்டம் இல்லையென்றால் அதற்கு ஏதுவான புதிய சட்டத்தை இயற்றி இவ்வாறானவர்களை அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
It is not wrong Mr Minister, good opportunity to explain the misunderstanding of of our religion by ACJU.
ReplyDeleteDear Brothers Do not be Emotional in refuting their question.. YES
ReplyDeleteRather, Ask for TV program to explain the TRUE message of Quran ( Worshipping ONE TRUE GOD) in Government Rupevahini channel. Prepare very well with learned scholars.
Do not make question answer session with BBS, Rather Request the Government a specific time in the MEDIA and Pass the Message of Quran to all SriLankans with knowledge.
Insha Allah, This will surfaice two objectives
1. We will clarify their (BBS) misunderstanding of the verses.
2. We will be able to passe the message of Allah to all nation.
May Allah Make us think wisely in handling the situation.
Never get angry for their act... Rather think of how to utilize the opportunity wisely.
May Allah Guide us and them in to correct path.
இப்போதாவது புரிந்து கொள்வோமா ஒரு மதத்தினது புனித புத்தகங்களை(Scriptures) விமர்சிப்பது எவளவு வேதனைக்குரியது என்பதை?
ReplyDelete"அவர்களது கடவுள்களை திட்டினால் அவர்கள் அல்லாவை திட்டுவார்கள்" இக்குர்ஆன் கட்டளையை பின் பற்றாத நமக்கு குர்ஆனை குறை சொன்னால் கோபப்பட என்ன அருகதை யுள்ளது.
ஆரம்பித்து வைத்தது நாம்தானே!
Who is this Harees? Why he stated such words in parliment. Is he know about Islam or not?
ReplyDeleteIn my point of view, this is the time we should explain our Quran to other communities. This is an opportunity to acju to explain. Why not, may be some people's can convert to Islam after explanation done by acju. But I'm not sure this acju have such talented people's to explain the Quran well.
I welcome this type of actions by bbs. Now, our duty is to be explained the Quran to them. But this Harees making unnecessary argument. Allah is challenging to bring the erroneous in Quran. But they cannot find a single word of error in Quran. But they don't know this is an opportunity for them. They will not understand the plans of Allah.
Allah is great.
இந்த இடுகையை அவதனிக்கும் போது புனித குர் ஆனில் தவருகள் உள்ளதோ என சிலர் நினைக்க தோனும் அவர்களின் கடிதத்திற்கு சரியான முறையில் விளக்கம் தர வேண்டும் அதனை பகிரங்கமாக
ReplyDeleteகுர் ஆனை கேள்விக் குற்படுத்துகிறார்கள் என்றால் அதுதான் தேவை சூழ்சியாளர் களிற்கெல்லாம் சூழ்சியாளன் அழ்ழாஹ்
ReplyDelete