முகத்தை காட்டமறுத்த, முஸ்லிம் சகோதரிக்கு 49 இலட்சம் அபராதம்
இத்தாலியில் நாடாளுமன்ற மேயர் இஸ்லாமிய பெண்ணின் முகத்தில் உள்ள முக்காடை கழட்ட சொல்லியும் அப்பெண் அதை கழட்டாததால் அந்த பெண்ணுக்கு €30,600(ரூ.4914,366 இலங்கை மதிப்பீட்டின்படி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் இளைஞர்களுக்கான பாராளுமன்றம் நடைபெறுவது வழக்கம். அதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டு பேசி தங்கள் வாதங்களை மேயரிடம் முன்வைப்பார்கள்.
அதன்படி நேற்று -11- நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருக்க அதை அவரின் தாய், பார்வையாளர்கள் வாயிலில் அமர்ந்து கொண்டு பார்த்து கொண்டிருந்தார்.
இஸ்லாமிய பெண்ணான அவர் தனது முகத்தை வெளியில் காட்டாமல் கருப்பு துணியால் ஆன முக்காடை முகத்தில் அணிந்திருந்தார்.
அதை பார்த்த குறித்த நாடாளுமன்ற மேயர் முகத்தை மூடி கொண்டு இங்கு அமர கூடாது, அந்த முக்காடை கழட்டுமாறு கூறியுள்ளார்.
இப்படி பல முறை மேயர் சொல்லியும் அந்த பெண் அதை செய்ய மறுத்துள்ளார்.
இதனால் மேயர் ஆணைக்கிணங்க அந்த பெண் பொலிசாரால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றபப்ட்டுள்ளார்.
பின்னர் நீதிமன்றத்தில் அவர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு சிறை தண்டனை தளர்த்தப்பட்டு, அபராத தொகையாக €30,600 கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இஸ்லாம் கட்டாயமாக முகம் மறைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் இவ்வாறான தண்டனைகளும் கஷ்டங்களும் வர வாய்ப்பில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.முகத்தையும் முன் கையையும் வெளிக்காட்ட அனுமதி இருந்தும்,இவ்வாறான அவசர சந்த்தர்ப்பத்துக்காவது முகத்தை காட்டாமல் விடுவதால் இவருக்கு ஏற்ப்பட்ட அவமானம் இந்நிகட்சியில் கலந்து கொண்ட இப்பெண்ணின் மகனுக்கு பெரும் அவமானமும் அந்தப்பாடசாலையில் தொடர்ந்து கல்வியை தொடர்வதில் வெட்கப்பட வேண்டியுள்ளது.இஸ்லாம் எதை எல்லாம் அனுமதிக்க வில்லையோ அதில் அதிகமான நன்மையையும் பாதுகாப்பும் இருக்கும்,அதேபோன்று இதேபோல் எதை அனுமதிக்கவில்லையோ,அதை நாம் நடை முறைப்படுத்துவதில் பிரச்சினை வரத்தான் செய்யும்.
ReplyDeleteஉங்கள் அழகை வெளிக்காட்ட வேண்டாம் என்று இஸ்லாம் சொல்கின்றது. அழகை வெளிப்படுத்துவதில் முகமும் அடங்குகின்றது
ReplyDeleteபெண்ணுக்கு எல்லாமே அழகு. அவளுடைய குரலும் அடுத்தவரை ஈர்ககும். அப்ப மௌனமாக இருக்கவேண்டி வருமே நணபரே.
Deleteஅடையாள அட்டை, கடவுச்சீட்டு இவைகளில் முகம் படத்தை பதிய ஏன் மறுக்கவில்லை ?
இஸ்லாம் பிரக்டிகளான மார்க்கம்.
மக்காவில் மஹ்ரமில்லாதவர்கள் பட்டாலும் வுழு முறியாது. ஏன் அங்கு மட்டும் அப்படி? வுழு முறியும் என்றிருந்தால் இரண்டு கஃபாக்கள் பெண்கிளுக்கு வேறு ஆண்களுக்கு கட்டவேண்டிருந்திருக்கும்.
இந்த பெண்ணிடம் கேளுங்கள் வாகனம் இருக்கிறதா அதற்கு insurance இருக்கிறதா என்று. Insurance ஹராம் என்றால்,ஆம் என்ன செய்ய அது இல்லாமல் வாகனம் ஓட்ட முடியாது என்பார்.
இது இவரின் மார்க்க தெளிவின்மையையே காட்டுகிறது. இஸ்லாத்தில் நிகாப் என்பது இல்லை என்றருந்தாலும் போடுபவர்கள் யாரும் இனி போடவேண்டாம் என்று கூறவரவில்லை. மாறாக Be sensible.
அல்லாஹ்வே கூறுகின்றான் உங்கள் மீது பாவங்கள் பலவந்தமாக தினிக்கப்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பாகமாட்டீர்கள் என்று.
ஆகவே இந்தப்பெண் அடம்பிடித்து மற்றவர்களையும் கஷ்டத்துக்கு உள்ளாக்கி இஸ்லாத்தை கேவலப்படுத்தயதுதான் மிச்சம்.
அழகு இரண்டு வகைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.மறைக்க வேண்டிய அழகு வெளிக்காட்டும் அழகு .பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் சட்டம் வேறு பொது இடத்துக்கு வரும் போது கவனத்தில் எடுக்க வேண்டியது எதுவோ (இஸ்லாம் அனுமதித்ததற்கு உள் நின்று)அவைகளை நாம் நடமுறைப்படுத்துவது அவசியம் என்றால் அவ்விடத்தி நாம் நடு நிலையான விடயத்துக்கு வர வேண்டும் .(பொதுவாக இப்பெண் அவ்விடத்துக்கு கட்டாயம் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை போகாவிட்டாலும் குற்றம் இல்லை என்ற நிலை இருந்தால் அவ்விடத்தை தவிர்த்து இருப்பது மிகச் சீறந்த விடயம்.இலகுவான எத்தனையோ வழிகளை இஸ்லாம் காட்டித்தந்தும் அதை அமைதியாக கடைப்பிடிக்க தெரியாமல் முறட்டுப்பிடியில் இருப்பது சிறந்ததாக அமையாது மாறாக அது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறிவிடும்,காலத்தையும் நேரத்தையும் மனதில் கொண்டு சமூகமளித்தல் போன்ற விடயங்களை முடிவெடுக்கும் மன நிலைகளை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்,
DeleteModern lovers saying like this
ReplyDeleteITS NOT COMPULSORY TO COVER THE FACE
ReplyDeleteallahu akbar
ReplyDeleteஹலோ ,மேதாவி குறுக்கு மறுக்கா பேசி நரகத்தை விலைக்கு வாங்காதே
ReplyDeleteஅல்லாஹு அக்பர்
ReplyDeleteசகோதரர் NALEEM கடந்த வாரம் நான் எழுதி இருந்த பின்னூட்டம் ஒன்றுக்கும் தனது எதிர்ப்பையும் சில புத்திமதிகளையும் கூறி இருந்தார் .நன்றி.இங்கு முகம் மூடுவது பற்றிய பல பிரச்சனைகளை பலரும் சம காலத்தில் கருத்து பரிமாற்றம் செய்கின்றோம்.பெண்கள் கட்டாயம் முகம் மூட வேண்டும் என்றும் முகத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று இன்னொரு சாரார் வாதடுவதும் எதோ ஒரு விளம்பரம் போன்று இருக்கிறது.
ReplyDeleteஇருக்கு என்பரும் இல்லை என்பவரும் களத்தில் உள்ள நிலைகளை அறியாதவர்கள்தான் அதிகம் என்று சொல்ல முடியும். .சில இடங்களில் முகத்தை மூடுவதால் முகம் மூடாமல் போய் இருந்தால் சந்திக்கப்படாத பெரும் பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிடவும் அவ்விடத்தில் ஒரு சமூகப்பிரச்சினை உருவாகும் சந்தர்ப்பமும் ஏற்ப்படுகின்றது இதை மேடைபோட்டு முகம் மறைக்க சொல்லும் அல்லது மறைக்க வேண்டாம் என்று சொல்லும் யாருக்கும் இதன் பாதிப்பு ஏற்ப்படுவதில்லை.இந்த முழக்கம் போடுபவர்கள் எதோ ஒரு வகையில் உயர்விடத்திலும் தனி வாகனங்களிலும் பிரயாணம் செய்யக்கூடியவர்களே.இவ்வாறானவர்களுக்கு எந்த வகையிலும் மட்டக்களப்பு ,ஓட்டமாவடி, மன்னம்பிட்டி,போன்ற பாலங்களில் இராணுவம் அல்லது போலிஸ் CHACK POINT களில் இவர்கள் நின்று கஷ்டப்பப்பட்டால் நிலைமை புரியும்.
இது இலகுவான மார்க்கம், இம்மார்க்கத்தில் நிர்பந்தம் கிடையாது,அல்லாஹ் உங்களுக்கு இலேசையே நாடுகிறான் கஷ்டத்தை நாட வில்லை,என்றல்லால் கூறும் அல்லாஹ் நிர்பந்தம் என்றொரு நிலையிலும் நமக்கு பல சலுகைகளை வழங்கி இருக்கும் போது விடாப்பிடியாக மூடித்தான் ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் நம்மவர்கள் கொஞ்சம் பல பக்கத்திலும் சிந்திக்க வேண்டும்.முகம் மூடாமல் போகும் பெண்களை இன்றைய உலகில் யாரும் கஷ்டப்படுத்தியதாக செய்திகளில் குறைவாகவே காங்கிறோம்.அவ்வாறு யாரும் துன்புறுத்தப்படவில்லை.
ஒரு பெண் தன் முகத்தை மூடவில்லை என்றால் அவளின் பத்திநித்தனமும் தக்வாவும் இல்லாமல் போகாது,மூமினான பெண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளட்டும்,அவர்கள் தன கால்களை தட்டித்தட்டி நடக்க வேண்டாம் என்று அல்லாஹ் சொல்லியுள்ள விடயங்களையும் பார்க்க வேண்டும்.முகம் மூடாத ஒரு பெண் தலையை குனிந்து பார்வையை தாழ்த்திக்கொண்டு போனால் யாரும் அப்பெண்ணை இம்சிக்க முயட்சிப்பதில்லை.மாறாக யாரும் வாதாடவில்லை முகத்தை துறந்து கொண்டு பல்லை இளித்துக்கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு போகுமாறு சொல்லவில்லை..
குறை கூருவதக்காகவே சிலர் சிந்திக்கும் வேலையில் உள்ளனர்.முகத்தை மூடு என்று சொல்லும் அமைப்புக்கு யார் எதிரான அமைப்பை கொண்டுள்ளாரோ அவர் இல்லை திறந்து போவதுதான் சரி என்றும் முகத்தை திறப்பதுதான் சரி யன்று சொல்லும் அமைப்புக்கு யாரல்லாம் எதிர் அமைப்பில் உள்ளார்களோ அவர்கள் இல்லை முகம் மூடுவதுதான் சரி என்று ஆல்லாளுக்கு வாக்குவாதம் வளருதே தவிர இதற்க்கு உண்மையான முடிவு இல்லாமல் உள்ளது..நடுநிலையாக உள்ள பெற்றோர்களும், கனவன்மார்க்களும், சகொதரர்களும் சிந்தித்தால் தன்னை சார்ந்த பெண் இவ்விடத்தில் எந்த நிலையில் சென்றால் பாதுகாப்பு என்ற முடிவு ஏற்ப்படும்..இதல்லாமல் அமைப்பின் முடிவுக்காகவும்,வேறு சிலருக்காகவும் நாம் இஸ்லாம் சொன்னவொன்றை பின்பற்றப்போனால் நிச்சயமாக பிரச்சினை வரவே செய்யும்.அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். ,.
.
நீதிக்கு தலைவணங்கு
ReplyDeleteஅடடா நீதிக்கு தலைவணங்கிய கூட்டத்துன் அங்கத்தவர் சொல்ராரு!
Deleteகாமடி?
Sutri walaittu shaittanukku wakkalattu waangubawarhal taan adiham
ReplyDeleteNiqab is to avoid 'fitnah'. If Niqab alone is 'fitnah, then avoid Niqab. Allah is the most merciful and the most forgiving.
ReplyDeleteநிகாப் பற்றிய அறிவு இல்லாமல் பேசுவது தீமையை தேடித்தரும்.
ReplyDeleteபெண்கள் முகம், கை தவிர்ந்த மற்றையவைகளை மறைப்பது தொடர்பான ஆடையுடைய பாடம் என்பது பெண்ணின் வீட்டிற்குள் உள்ள சட்டம்.
பெண்கள் வெளியில் முகம் கை திறந்த நிலையில் இருப்பார்களானால், அங்கே ஆண்களின் பார்வை படமுடியாத இடத்தில் மட்டுமே இருக்க முடியும். அதை இஸ்லாம் அனுமதிக்கிறது.
இக்காலத்தில் ஆண்கள் பார்வை படாத இடம் என்று வீட்டை தவிர வேறு இடங்களை அடையாளப்படுத்த முடியாது என்பதால் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா முகம் மூடுவது வாஜிப் என்ற பத்வாவை வழங்கியுள்ளது.
(இதனை சரியாக புரிந்துகொள்ளல் அவசியம்)
ஸஹாபிப் பெண்மணிகள் முகத்திரை அணிந்தே இருந்திருக்கிறார்கள். அதற்கு பல ஹதீஸ்களை உதாரணம் காட்ட முடியும்.
ஆயிஷா நாயகி திரைக்குப்பின்னாலேயே ஹதீஸ் பாடம் நடத்தியுள்ளார்கள்.
ஹஜ்ஜின் போது முகம் மறைக்க தடைவிதிக்கும் ஹதீஸில் ஏற்கனவே பெண்கள் முகத்திரை அணிந்ததால் தான் அத்தடை வந்திருக்கிறது.
ஹிஜாபுடைய ஆயத்து ஹிஜ்ரி 4 அல்லது 5 இல் தான் இறங்கியது. அதற்கு பின்பு எந்த ஸஹாபிய பெண்மணிகளும் அந்நிய (மஹ்ரம் அல்லாத) ஆண்களுடன் முகம் பார்த்து பேசியது கிடையாது.
யாரெல்லாம் பெண் ஸஹாபிகளோடு மஹ்ரமில்லாத ஸஹாபாக்கள் பேசிய ஹதீஸ்களை காட்டுகிறார்களோ அது அத்தனையும் ஹிஜாபுடைய வசனம் இறங்குவதற்கு முன்பு நடந்த சம்பவங்கள். (ஹிஜாபுடைய சட்டம் பெண்களுக்கு நபி (ஸல்) அவர்களுக்கும், அடிமைகளுக்கும் முன்னிலையில் விதி விலக்கு ).
எப்படி தலையை மறைத்தவர்களுக்கு ஹஜ்ஜின் போது தலையை மறைக்க வேண்டாம் என கட்டளை வந்ததோ,
வழமையான நேரத்தில் பெண்ணை தொட்டால் உழு முறியும் என்பது ஹஜ்ஜின் போது முறியாது என கட்டளை உள்ளதோ,
இதே போன்று முகம் மூடியிருந்த ஸஹாபிய பெண்களுக்கு ஹஜ்ஜின் போது மட்டும் முகம் மூட தடை வந்தது.
ஸஹீஹுல் புகாரியில் உணவு சம்பந்தமான பாடத்தின் கீழ் "வயிறு நிரம்ப உண்ணுதல்" சம்பந்தமான தலைப்பில் ஹதீஸ் இலக்கம் 5381 இல் உம்மு சுலைம் (ரழி) அவர்கள் "அவர்களின் முகத்திரை ஒன்றை எடுத்து ரொட்டியை சுருட்டுவதாக" வருகிறது. நீண்ட ஹதீஸ். தெளிவாக முகத்திரை பற்றி வருகிறது.
நண்பரே தெரியாமல் பேசவேண்டாம். போர்கலங்களில் பெண்கள் பங்கு பற்றியது ஆரவாரம் செய்தது எல்லாம் முகத்தை மறைத்துக்கொண்டுதானா?
Deleteஎல்லொருக்கும் தெரிந்த ஒரு ஹதீஸ்
பெண்கள்தான் அதிகமாக நரகத்தில் இருக்கிறார்கள் என்று நபியவர்கள் கூற அதற்கான காரணத்தை கேட்ட பெண் ஒரு கருப்பின பெண். அவர் நீங்கள் சொல்லுவது அனைத்தையும் மறைத்திருந்திருந்தால்்கறுப்பின பெண்தான் என்று எவ்வாறு தெரிந்திருக்கும். மேலும் பல ஹதீஸ்களை உதாரணமாக கூரலாம்.
Women no need to cover the face.
ReplyDeleteஇஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை. விரும்பிய பெண்கள் முகத்தை திறக்கலாம்/மூடலாம். எனினும் சில சந்தர்ப்பங்களில் கட்டாயம் பெண்கள் முகத்தை திறந்தே ஆகவேண்டும். உதாரணமாக தொழுகை, ஹஜ், உம்ரா, வியாபாரம், மருத்துவம்,.......போன்ற காரியங்களில் கட்டாயம் முகத்தை திறந்தே ஆகவேண்டும். இவ்வாறான விடயங்களைத் தவிர்த்து மற்றய சந்தர்ப்பங்களில் பெண்கள் முகத்தை மூடுவது சிறந்தது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
ReplyDeleteமனிதன் தன் கரங்ளால் தனக்குத் தானே தீங்கு தோடுகிறான்,நிர்ப்பந்ததிற்கு சலுகைகள் உண்டு என்று இறைவன் கூறுகிறான் சரியாக புரிந்து கொண்டு வாழ்வோம்
ReplyDelete