இஸ்ரேலில் 3 வது நாளாக தீ, பலஸ்தீனர்களா காரணம்..? 12 பேர் கைது
இஸ்ரேலில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் மூன்றாவது நாளாக போராடிவரும் நிலையில், வேண்டுமென்றே தீ வைத்த சந்தேகத்தின் பேரில் 12 பேரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த காட்டுத்தீக்கு பாலஸ்தீனிய ஆர்வலர்கள் காரணமாக இருக்கலாம் என்று அரசாங்கம் நம்புகிறது. ஹைஃபா நகரில் காட்டுத்தீயினால் சுமார் 80 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
ஜெரூசலத்தில் புறநகர் பகுதியில் உள்ள வீடுகளும் தீயால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன.
காட்டுத்தீ காரணமாக பலத்த காயம் அடைந்தோர் குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும் பல டஜன்கணக்கான மக்கள் புகையை சுவாசித்ததன் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விதை விதைத்தவன் விதை அறுப்பான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்.அப்புறத்தில் நீ அன்று இட்ட தீ தான் நின்று எரிகிறதோ
ReplyDeleteயார் கண்டார்.
கொல்லப்படவும் , கைதாகவும் பாலஸ்தீனர்களே உள்ளனர்
ReplyDeleteசரி. பாலஸ்தீனர்கள் செய்தார்கள் என்று வைப்போம். ஏன் செய்தார்கள்.???
ReplyDelete