2500 பேர் பயணித்த ரயிலுக்கு ஆபத்து, கண்பார்வையாற்றவர் சிவப்பு துணியினால் நிறுத்தினார்
காங்கேசன்துறையில் இருந்து காலிக்கு பாரிய அளவிலான பயணிகளுடன் பயணித்த யாழ்தேவி ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை நபர் ஒருவர் தடுத்துள்ளார்.
வடக்கு ரயில் வீதியின் 108 3/4 கிலோ மீற்றர் மைல் கல் அருகில் ரயில் பாதை இரண்டாக உடைந்திருந்த நிலையில் ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை அவதானித்த நபர் ஒருவர் சிவப்பு நிறத்திலான துணியை ரயிலை நோக்கி அசைத்து ஆபத்தினை தெரியப்படுத்தினார். இதனை உணர்ந்து கொண்ட ரயில் சாரதி ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.
தம்புக்த்தேகமவில் வசிக்கும் அங்கவீனமுற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பாரிய அனர்த்தத்தை தடுத்துள்ளார்.
வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தொன்றில் கண்களை இழந்த 44 வயதான W.விஜித என்ற நபர் திறமையாக செயற்பட்டமையால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளது.
நேற்று மாலை 3.25 அளவில் பௌணர்மி என்பதனால் விகாரைக்கு செல்வதற்காக வடக்கு ரயில் பாதை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வடக்கு ரயில் பாதையின் 10 இலக்கம் பெதிவெவ கிராமத்திற்கு அருகில் (தபுத்தேகம மற்றும் சேனரத்கம ரயில் பாதைக்கு இடையில்) ரயில் பாதை கிட்டத்தட்ட 3 அடி அளவில் உடைந்து பிரிந்து சென்றிருந்தனை கண்ட மக்கள் இது தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்தில் உடனடியாக அறிவித்துள்ளனர்.
அந்த அறிவிப்பு மேற்கொண்டு சில நிமிடங்கள் செல்வதற்கு முன்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு தபுத்தேகமயில் இருந்து செனர்த்கம நோக்கி வேகமாக பயணித்த ரயில் ஒன்றின் சத்தத்தை கேட்ட விஜத, உடனடியாக தனது வீட்டிற்கு சென்று சிவப்பு நிறத்திலான ஆடை ஒன்றை எடுத்து வந்து ரயில் வீதியில் விபத்தொன்று ஏற்படும் என்பதனால் ரயிலை உடனடியாக நிறுத்துமாறு ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை அசைவுகளை மேற்கொண்டுள்ளார்.
ஆபத்தென்பதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.. ரயிலை நிறுத்திய சாரதி உட்பட அதிகாரிகள் ரயில் பாதையை அவதானித்த போது ரயில் பாதையின் ஒரு பகுதி உடைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த நபர் சரியான நேரத்தில் இந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பாரிய விபத்தொன்று ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் கிட்டத்தட்ட 2500 மேற்பட்ட பயணிகள் யாழ்தேவியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
brave man we should appreciate his work and he saved many peoples lives
ReplyDeletemust given cash reward to this handicap gentleman by the government
இந்த மகத்தான செயலைப் பாராட்டி அந்த சிவப்புக் கொடி காட்டிய நபருக்கு இலங்கை மக்களும் குறிப்பாக அதிகாரிகளும் நன்றிக்கடனையும் வெகுமதியையும் வழங்க வேண்டும். 2500 பேருடைய உயிரும் உடைமைகளும் காப்பாற்றப்பட்டமை மிகவும் பாரிய ஒரு மகத்தான செயலாகும்.
ReplyDeleteThis is a good example to say still humanity and good human being are there. Government and railway depth should honour such individuals. Further railway dept should seriously investigate for the cause of the breaking rail slips.
ReplyDelete