2.33 பில்லியன் ரூபா, வருமானத்தைப் பெற்ற சிறிலங்கா கடற்படை
வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சேவையை பொறுப்பேற்ற ஒரு ஆண்டு காலத்தில், சிறிலங்கா கடற்படை 2.33 பில்லியன் ரூபாவை வருமானத்தைப் பெற்றிருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
அவன்ட் கார்ட் நிறுவனத்திடம் இருந்து, கடந்த ஆண்டு நொவம்பர் 13ஆம் நாள் இந்தப் பணியை சிறிலங்கா கடற்படை பொறுப்பேற்றிருந்தது.
2015 நொவம்பர் 13ஆம் நாள் தொடக்கம், 2016 நொவம்பர் 13ஆம் நாள் வரையிலான ஒரு ஆண்டு காலப்பகுதியில், 6646 வணிகக் கப்பல்களின் பயணங்களுக்கு சிறிலங்கா கடற்படை பாதுகாப்புச் சேவையை அளித்துள்ளது.
காலியில் இருந்து 6150 பாதுகாப்பு பணிகளும், கொழும்பில் இருந்து 496 பாதுகாப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாதம் ஒன்றுக்கு சராசரியாக 554 பாதுகாப்பு பணிகளை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டுள்ளது.
வணிகக் கப்பல்களின் பாதுகாப்பில், பாதுகாப்புக் குழுக்களை ஈடுபடுத்தியதன் மூலம், பெறப்படும் வருமானம் அரசாங்கத்தின் திறைசேரியில் சேர்க்கப்படுகிறது.
Post a Comment