1915 இல் போன்று, சிங்கள - முஸ்லிம் கலவரத்தை உருவாக்க முயற்சி
சிலர் தமது சொந்த நலனுக்காக மீண்டும் ஒரு சிங்கள - முஸ்லிம் கலவரம் ஒன்றை உருவாக்க சில குழுக்கள் முயற்சிப்பதாக கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி நிகழ்சி ஒன்றில் நேற்று (16) இரவு கலந்துக்கொண்டு உறையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இதற்கு முன்னர் 1915 இல் சிங்கள-முஸ்லிம் கலவரம் ஒன்று எற்பட்டுள்ளது. அதன்போது D.S. சேனாநாயக்க, F.R. இருந்தன சேனாநாயக்க, பியதாஸ சிறிசேன மற்றும் அநாகரிக தர்மபால போன்றோர் கைது செய்யப்பட்டனர்.
நூறு ஆண்டுகளுக்கு பின்னர் அதே போன்ற நிலைமை ஒன்றை உருவாக்க ஒரு சிலர் முயற்சிக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார். அதை பொதுமக்கள் புரிந்துகொண்டு தடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களில் ஒரு வகுப்பு வாத தீவிரவாதத்தை உருவாக்க சதி செய்கின்றனர் எனவும் எச்சரித்துள்ளார்.
Post a Comment