ஹஜ் நிறைவேற்ற 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு இதுவரை 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
இவர்களில் ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களைத் தவிர்த்து 7ஆயிரம் பேர் ஹஜ் கடமைக்காக காத்திருப்பதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி மொஹமட் தாஹா சியாத் தெரிவித்தார்.
அடுத்த வருட ஹஜ் பயணிகள் தெரிவு, விண்ணப்பித்த வரிசைக் கிராமத்திற்கு அமைவாகவே இடம்பெறும் எனவும் அவர் கூறினார். இதேவேளை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் விண்ணப்பங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
அடுத்த வருடத்திற்கான ஹஜ் யாத்திரை பயணிகள் தெரிவின் போது முதன் முறையாக ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கே முன்னரிமை வழங்கப்படவுள்ளது.
அடுத்த வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் தற்போது ஹஜ் முகவர்களிடம் எதுவித உடன்படிக்கையும் செய்து கொள்ள வேண்டாமெனவும் அரச ஹஜ் குழு விண்ணப்பதாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ARA.Fareel
Post a Comment