Header Ads



ஒரு வீட்டுக்கு 10 மாடுகள்

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான வாசிப்பு இன்றைய தினம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

பால் பண்ணையாளர்களுக்கு ஒரு வீட்டுக்கு 10 மாடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், பால் உற்பத்தி அதிகரிப்பிற்கு 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்காக 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விவசாயத்துறையில் வருவாய்களை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாகவும், அவர்களுக்கான நிலம் ஒதுக்கி கொடுப்பதற்காக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

2 comments:

  1. இது மறைமுகமாக எல்லாரும் மாட்டு இறைச்சியை தின்னுங்கோ என்று நிதி அமைச்சர் சொல்லுறாரு.பசு மாடு என்றாலும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு பால் தராது அதன் பிறகு மாட்டை பராமரிப்பது பொருளியல் ரீதியாக கடினம் எனவெ கடைசியில் மாட்டு உரிமையாளர் இறைச்சி கடை நானாவை தான் அணுக வேண்டும்!!

    ReplyDelete
  2. maaduhal roaddukku varaamal irunthaal sari. accidentil maaddaamal irukka.

    ReplyDelete

Powered by Blogger.