Header Ads



குப்பையில் பை, நிறைய கிடந்த 1,000 ரூபாய் நோட்டுகள்

பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது எப்படியெல்லாம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், மராட்டிய மாநிலத்தின் கலாசார தலைநகரம் என்ற பெருமைக்குரிய புனே நகரில் நடந்திருக்கிறது.

புனே மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கிற பணியில் ஈடுபட்டுள்ளவர், பெண் தொழிலாளி சாந்தா ஓவ்ஹல்.

இவர் நேற்று அங்குள்ள கல்லூரி சாலையில் குப்பைகளை சேகரித்தபோது ஒரு பிளாஸ்டிக் பையை கண்டெடுத்தார். அதை அவர் திறந்து பார்த்தபோது அதில், ‘செல்லாது’ என அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். மேலதிகாரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அதை கைப்பற்றி சென்றனர்.

அந்தப் பையில் மொத்தம் ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதுபற்றி விசாரணை நடப்பதாக புனே டெக்கான் ஜிம்கானா போலீஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.


1 comment:

  1. வெறும் 52 ஆயிரம் வைத்திருந்ததற்கே இவ்வளவு பயமா? ஒரு வேலை தவிறவிட்டிருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.